பேலியகொடை நகர சபை துப்பாக்கிச்சூட்டில் உறுப்பினர் பலி

474

‘களனி – பேலியகொட பிரதேசங்கள்; சர்ச்சைக்குரிய அமைச்சரும், இராஜபக்சக்களின் ஆசீர்வாதத்தை பெற்றவருமான மேர்வின் டீ சில்வாவின் நிழல் அரசு கோலோச்சும் பகுதிகள்’

துப்பாக்கிச்சூட்டில் பேலியகொடை நகர சபை உறுப்பினர் பலி-

இலங்கையின் தலைநகர் கொழும்பை அண்மித்த பேலியகொடை நகர சபையின் உறுப்பினர் ஒருவர், இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார்.
சாமின் சந்தருவன் என்ற நகர சபை உறுப்பினரான இவர்  தளுகம பழைய கண்டி வீதியில் தனது வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இவர் பலியாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களனி – மற்றும் பேலியகொட பிரதேசங்கள் இலங்கையின் சர்ச்சைக்குரிய அமைச்சரும், இராஜபக்சக்களின் ஆசீர்வாதத்தை பெற்றவருமான மேர்வின் டீ சில்வாவின் நிழல் அரசு கோலோச்சும் பகுதிகளாக விளங்கி வருகின்றன. இந்தப் பகுதிகளின் பிரதேச சபைகள் மற்றும் நகரசபை உறுப்பினர்களுக்கும் நிழல் உலக தாதா என வர்ணிக்கப்படும் மேர்வினுக்கும் கடந்த சில வருடங்களாக முரண்பாடு தொடர்ந்து வருவதும் பரஸ்பர தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், கொலைகள் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆந்த வகையில் இந்த முரண்பாடுகளின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கொலையா? அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட கொலையா? என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

SHARE