நூருள் ஹுதா உமர்
சமுர்த்தி காரியாலயத்தினால் பொதுமக்கள் நலன் சேவைகள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயலமர்வுகள் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் இந் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இறக்காமம் பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினால் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், இறக்காமம் 02 ஆம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள சமுர்த்தி, காத்திருப்போர் மற்றும் ஏனைய சகல குடும்பங்களுக்குமான சுகாதாரம், ஓய்வூதியம், சமுர்த்தி நலனோம்பு திட்டங்கள் தொடர்பான பொதுமக்கள் நலன் சேவைகள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு நேற்று ஜீ. எம்.எம்.எஸ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பிரிவுக்கு பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒ.எல்.யாக்கூப் தலமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு கருத்தரங்கில் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம். தஸ்லீம் விஷேட அதிதியாக கலந்துகொண்டு சமுர்த்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
மேலும் இந்நிகழ்வில், கிராம மட்ட சமுர்த்தி அமைப்புகளுக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல். ஜாஹிட், பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜௌஸ், பிரிவிற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் எஸ்.எல். ஹம்சா, அபிவிருத்தி உத்தியோகத்தர் முப்தி மஹ்மூது உட்பட கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமுர்த்தி சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.