பொன்னியின் செல்வன் நடிகருடன் ரொமான்ஸ் செய்யப்போகும் பேபி சாரா.. இயக்குனர் இந்த பிரபலத்தின் மகளா

39

 

பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமாவின் பெருமை என்பதை நாம் அறிவோம். பல ஆண்டுகளாக பல நட்சத்திரங்கள் முயற்சி செய்தும் எடுக்கமுடியாமல் இருந்த இந்த கதையை, மணி ரத்னம் எடுத்து காட்டினார்.

சாரா அர்ஜுன்
காதல் கதையாக இதை அவர் கையாண்ட விதம் மெய்சிலிரிக்க வைத்தது. இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இதில் நந்தினி கதாபாத்திரத்தின் சிறு வயது தோற்றத்தில் சாரா அர்ஜுன் நடித்திருந்தனர். ஏற்கனவே தெய்வத்திருமகள், சைவம் போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர், நந்தினியாகவும் கவர்ந்தார்.

கதாநாயகியாகும் சாரா
இந்நிலையில், தற்போது குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சாரா அர்ஜுன் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். ஆம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தின் சிறு வயது ரோலில் நடித்திருந்த நடிகர் சந்தோஷ் மற்றும் சாரா அர்ஜுன் இருவரும் ஜோடியாக இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார்களாம்.

இப்படத்தை மறைந்த பிரபல இயக்குனர் ஜீவாவின் மகளான சனா மரியன் தான் இப்படத்தை இயக்கவுள்ளாராம். இது அவருக்கு அறிமுக இயக்கம் ஆகும். இயக்குனர் ஜீவா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் 13பி, உன்னாலே உன்னாலே ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE