இதுவரை 65 பேர் கைதாம்! பொலிஸ் ஊடகப் பேச்சாளர்- அஜித் ரோஹண

443

dfghjuytrதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவி செய்தனர் எனக் கூறப்படும் 65 பேர் கடந்த 2 மாதங்களில் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கிறார். வடக்கு கிழக்குப் பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் எனவும் அதில் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். கைது செய்யப்பட்டுள்ள 10 பெண்களில் எண்மர் பூஸா முகாமிலும் இருவர் வவுனியா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

SHARE