போக்குவரத்து நெரிசல்களை தடுக்க புதிய நுட்பம் (வீடியோ இணைப்பு)

1281
சமகாலத்தில் சனத்தொகை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவது அறிந்ததே.இப்பிரச்சினைக்கான தீர்வாக பல்வேறு போக்குவரத்து முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றின் தொடர்ச்சியாக அமெரிக்காவின் மெக்ஸிக்கோ நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க மிதக்கும் போக்குவரத்து முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

முதன் முறையாக 3 மைல் தூரத்திற்கு அறிமுகம் செய்யப்படும் இச் சேவையின் ஊடாக வருடாந்தம் 37 மில்லியன் பயணிகளை போக்குவரத்தில் ஈடுபடச் செய்வதுடன் காலப்போக்கில் 10 மைல் தூரத்திற்கு அதிகரித்து வருடாந்தம் 290 மில்லியன் பயணிகளை போக்குவரத்தில் ஈடுபடச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதில் பயணம் செய்யும்போது மணிக்கு 9 மைல் வேகத்திலேயே பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE