போதிய சிகிச்சையின்றி உயிரிழந்துள்ளார்.

491

downloadபுற்றுநோயால் கொழும்பில் உயிரிழந்த குழந்தையினது பூதவுடலை கொழும்பிலிருந்து எடுத்துச் செல்ல பெண் தொழிலாளர்கள் கைகொடுத்து முன்னுதாராணம் ஆகியுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் யாழ்.தளபதிகளுள் ஒருவராக இருந்தவர் மகேந்தி. அவருட்பட மூன்று பேர் குடும்பத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்தனர். அவர்கள் எவரும் தற்போது உயிருடனில்லை.
இந்நிலையில் அவர்களது ஒரு சகோதரனான  யோகேந்திரன் தனது குடும்பத்துடன் வன்னியில் வறுமையில் வாழ்ந்து வருகின்றார். அவரது மகளான தமிழ்மதி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு போதிய சிகிச்சையின்றி உயிரிழந்துள்ளார். கொழும்பு சென்று மருத்துவ சிகிச்சையினைப்பெற போதிய பணவசதி இன்மையினாலேயே  அக்குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அரச அம்புலன்ஸ் மூலம் கொழும்பில் சிகிச்சைக்கென கொண்டு செல்லப்பட்ட இக்குழந்தை தற்போது உயிரிழந்துள்ளது.
எனினும் பூதவுடலை வன்னிக்கு எடுத்துச் செல்ல பணமின்மையால் கடந்த சில நாட்களாக கொழும்பில் பிரேத அறையில் அச்சிறு குழந்தையினது பூதவுடல் வைக்கப்பட்டிருந்தது. சம்பவம் பற்றி அறிந்த கிளிநொச்சியிலுள்ள தனியார் ஆடை தையற் தொழிற்சாலை பெண்பணியாளர்கள் இணைந்து திரட்டி வழங்கிய பணத்தை அடுத்து பூதவுடல் சொந்த இடத்திற்கு நேற்று (07.04.14) கொண்டு செல்லப்பட்டுள்ளது.

SHARE