போரை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்த பிக்குகள் ஒத்துழைப்பு வழங்கினர்

479

GRBBS041813

30 ஆண்டுகளான நீடித்த போரின் போது பௌத்த பிக்குகளின் ஒத்துழைப்பு முக்கியமானது. போரை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்த பிக்குகள் ஒத்துழைப்பு வழங்கினர்.இன்றும் முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களின் சில கிராமங்களை பௌத்த பிக்குகளே பாதுகாத்து வருகின்றனர்.குறித்த மாவட்டங்களில் வாழ்ந்து வந்த அப்பாவி சிங்கள மக்களை விரட்டியடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை பௌத்த பிக்குகள் தடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் சில கிராமங்களை பௌத்த பிக்குகளே பாதுகாத்து வருவதாகப் பாராட்டியுள்ளார் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. மருதானை ராஜசேகரராமயவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பௌத்த பிக்குகளின் ஆலோசனை வழிகாட்டல்கள் மிகவும் அவசியமானது. நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்க பௌத்த பிக்குகளின் ஆலோசனை அடிக்கடி எதிர்பார்க்கின்றோம்.

நாட்டில் விஹாரைகள் இருந்திருக்காவிட்டால் பௌத்த உரிமைகளை பாதுகாத்திருக்க முடியாது. பௌத்த மத உரிமைகளை உறுதி செய்ய பிக்குகள் வழங்கி வரும் ஆதரவு அளப்பரியது. மஹா சங்கத்தினரை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.Monks-GotaMonks-Gota-01

0

 

0

 

0

 

0

 

New

 

 

SHARE