போலந்தில் விமானங்கள் நடுவானில் மோதல்: 2 பேர் பலி

407
போலந்தில் இன்று இரண்டு சிறிய விமானங்கள் வானில் மோதிக்கொண்டன. தலைநகர் வர்சாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ராடோம் நகரின் அருகில் இந்த விபத்து நடந்தது.

ஒவ்வொரு விமானத்திலும் தலா இரண்டு பேர் பயணம் செய்தனர். நடுவானில் மோதிய பின்னர் ஒரு விமானம் கீழே விழுந்த வேகத்தில் தீப்பிடித்தது. அதில் இருந்த இரண்டு பேரும் உடல் கருகி இறந்தனர். மற்றொரு விமானம் விழுந்து சேதமடைந்தபோதும், அதில் இருந்த இரண்டு பேரும் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

தெற்கு போலந்தில் பாராசூட் வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் 11 பேர் இறந்தனர். இந்த சம்பவம் நடந்து 4 நாட்களில் இன்று மற்றொரு விமான விபத்து நடந்துள்ளது.

SHARE