போலீசாரால் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் பட நடிகர்- உயிரிழந்த பெண்

41

 

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியிருநதது.

சுகுமார் இயக்கிய இந்த படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா என நடிகர்கள் பலர் நடித்திருந்தார்கள். பல கோடி வசூலித்துள்ள இப்படம் மாபெரும் வெற்றியடைய படக்குழு இப்போது 2ம் பாகத்திற்கு தயாராகி வருகிறார்கள்.

அண்மையில் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு ஓரளவிற்கு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் கைது
இந்த படத்தில் புஷ்பாவின் நண்பராக கேசவ் என்ற பெயரில் நடித்தவர் ஜகதீஷ். இவர் காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணை ஏமாற்றி உள்ளாராம். இதனால் அந்த பெண் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இதனால் தற்போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளாராம். இந்த தகவல் தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE