போஸ்னியாவுடன் நாளை மோதல்: அர்ஜென்டினா வீரர் மெஸ்சி முத்திரை பதிப்பாரா?

478

2 முறை உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி ‘எப்’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. போஸ்னியா, ஹெர்சகோவா, நைஜீரியா, ஈரான் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் போஸ்னியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நாளை அதிகாலை 3.30 மணிக்கு நடக்கிறது. அர்ஜென்டினா வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பிரேசில் வீரர் நெய்மர் தொடக்க ஆட்டத்தில் முத்திரை பதித்தது போல மெஸ்சியும் ஆதிக்கம் செலுத்துவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர கோன்சாலோ, செர்ஜியோ அதிரோ, டி மரியா போன்ற சிறந்த வீரர்களும் அர்ஜென்டினா அணியில் உள்ளனர். இரு அணிகளும் மோதிய 2 ஆட்டத்திலும் அர்ஜென்டினாவே வெற்றி பெற்றது.

மேலும் அந்த அணிக்கு எதிராக 7 கோல்கள் அடித்துள்ளன. போஸ்னியா ஒரு கோல் கூட அடித்தது இல்லை. உலக கோப்பையில் முதல் முறையாக விளையாடும் போஸ்னியா அணி அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கிறது.

முன்னதாக இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து– ஈக்வடார் அணிகளும், நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ்– ஹோண்டுராஸ் அணிகளும் மோதுகின்றன.

SHARE