பௌத்த சட்டம் பற்றி பேச வருகிறார் பூட்டான் பிரதம நீதியரசர்

529
பௌத்த சட்டம் தொடர்பான பேருரையாற்ற பூட்டான் பிரதம நீதியரசர் லியோன்போ சோனம் டெப்பிகியோ இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

எதிர்வரும் 10 ம் திகதி அவர் லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இந்த உரையை ஆற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய உலக சட்டத்துறையில் பௌத்த சட்டத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE