பௌத்த மதம் பற்றி கற்பிக்க வேண்டிய நீங்கள் இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது- அசாத் சாலி

598

முஸ்லிம் மக்கள் பற்றி முன்னெடுத்து வரும் பிரசாரம் சம்பந்தமாக தன்னுடன் பகிரங்க நேரடி விவாதத்திற்கு வருமாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, பொதுபால சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

பொதுபல சேனா அமைப்பு கடந்த ஒன்றரை வருடங்களாக முஸ்லிம் மற்றும் ஏனைய சிறுபான்மை மதங்களுக்கு எதிராக முன்னெடுத்து பகையான வேலைத்திட்டங்கள் தொடர்பில் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன்.

எந்த மதம் தொடர்பிலும் தவறான அர்த்தப்படுத்தலை நீங்களோ, உங்களது அமைப்போ மேற்கொள்ளக் கூடாது.

என்பதை மிகவும் வலியுறுத்தி சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உங்களது நடவடிக்கையும் உங்களது அமைப்பின் செயற்பாடுகளும் புத்த பகவானின் தர்மங்களுக்கு சேததத்தை உண்டுபண்ணும் என்பது எனது கடுமையான நம்பிக்கையாகும்.

எந்த முஸ்லிம் தலைவர்களும் உங்களது சவாலை ஏற்றுக்கொள்வதில்லை என நீங்கள் குற்றம் சுமத்தியிருந்தீர்கள். என்னுடன் விவாதத்திற்கு வருமாறு விடுத்த அழைப்பை மீணடும் நினைவூட்ட விரும்புகிறேன்.

விவாதத்திற்கு வருமாறு ஒரு தொலைக்காட்சி மூலமாக நான் உங்களுக்கு அழைப்பு விடுத்தேன்.

எனினும் நீங்கள் அதனை புறந்தள்ளி விட்டு, டிலாந்த விதானகேவை விவாதத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தீர்கள்.

நீங்கள் முன்வைத்துள்ள பொய்யான விடயங்கள் குறித்து விவாதத்திற்கு வருவதற்கு நீங்கள் அச்சம் கொண்டிருப்பது இதன் மூலம் தெளிவாக காணக் கூடியதாக இருந்தது.

புனித குர் – ஆன் மற்றும் இஸ்லாம் தர்மம் பற்றி நீங்களும் பொதுபல சேனா அமைப்பும்                             monks_fighting-colombo-telegraph4                               மேற்கொண்டு வரும் பொய் பிரசாரங்கள் தொடர்பில் எந்த ஊடகத்தின் மூலம்                                                    என்னுடன்     விவாதத்திற்கு வருமாறு மீண்டும் சவால் விடுக்கின்றேன்.

மறைக்கப்பட்ட அரசியல் தேவைக்கு அமைய ஊடகங்களில் கவனத்தை பெறுவதற்காக நீங்களும், பொதுபல சேனாவும் முன்னெடுத்து வரும் பொய்ப் பிரசாரங்கள் தொடர்பில் என்னுடன் விவாதத்திற்கு வருமாறு நான் கடிதம் மூலம் அறியத்தருகிறேன்.

தொலைக்காட்சியில் நடத்தும் இந்த விவாதத்தின் மூலம் அமைதியை விரும்பும் பெரும்பாலான உண்மையான பௌத்த மக்கள் உங்களது அடிப்படையற்ற வாதங்கள் குறித்து உரிய புரிந்துணர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

எனது இந்த கோரிக்கைகக்கு நீங்கள் உரிய பதிலை வழங்குவீர்கள் என எதிர்பார்ப்பதுடன் மேற்படி விவாதத்தின் மூலம் உங்களது அமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக இலங்கை மக்கள் சரியாக அறிந்து கொள்ள முடியும்.

இப்படிக்கு
அசாத் சாலி
தலைவர்
தேசிய ஐக்கிய முன்னணி

 

SHARE