மகனின் ஆசையை நிறைவேற்றிய ஷேவாக்

557

ஷேவாக் நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்தார். அவர் சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 58 பந்தில் 12 பவுண்டரி, 8 சிக்சருடன் அவர் 122 ரன் எடுத்தார். இந்த போட்டித் தொடரில் 2–வது சதம் இதுவாகும்.

இந்த அதிரடியான ஆட்டம் மூலம் மகனுக்கு கொடுத்த வாக்குறுதி, ஆசையை ஷேவாக் நிறைவேற்றியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–

நான் ரன் எடுக்காமல் மோசமாக விளையாடுவதால் எனது மகனை அவனது சக மாணவர்கள் கிண்டல் செய்து உள்ளனர். நான் அவனிடம் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பேன் என்று உறுதி அளித்தேன். அதன்படி எனது ஆட்டம் அதிரடியாக இருந்து ரன்களை குவித்தேன். எனது ஆட்டம் மூலம் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

SHARE