மகளுக்காக ரிஸ்க் எடுக்கிறார் அர்ஜூன் 

341மகளுக்காக புதிய படம் இயக்க முடிவு செய்துள்ளார் அர்ஜூன்.ஆக்ஷன் ஹீரோ அர்ஜுனுக்கு 90களில் சருக்கல் ஏற்பட்ட போது தானே களத்தில் குதித்தார். ‘சேவகன், ‘பிரதாப், ‘ஜெய் ஹிந்த் என தனது படங்களை தானே இயக்கி நடித்தார். இதில் அவருக்கு மீண்டும் மார்க்கெட் சூடு பிடித்தது. தற்போது ‘ஜெய்ஹிந்த் பார்ட் 2 இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவரது மகள் ஐஸ்வர்யா நடிகை ஆனார். விஷால் ஜோடியாக ‘பட்டத்து யானை என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் அப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். தற்போது ஜெய்ஹிந்த் 2ம் பாகம் படத்தின் இணை தயாரிப்பாளராக உள்ளார்.‘ஐஸ்வர்யாவுக்கு நிறைய திறமை இருக்கிறது. அதை வெளிக்கொண்டுவருவதற்கான சரியான கதாபாத்திரம் அமையவில்லை. எனவே அவரது திறமையை நிரூபிக்கும் வகையில் நானே ஒரு படம் இயக்க உள்ளேன். அத்துடன் அப்படத்தை தயாரிக்கவும் உள்ளேன் என்கிறார் அர்ஜுன்

 

SHARE