மகிந்தவை தொழவேண்டும் எனக் கூறியஅஸ்வர் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல் – பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு

439
மகிந்தவை தொழவேண்டும் எனக் கூறிய அஸ்வர் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல் – பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு

தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தொலைபேசி அழைப்புக்கள், குறுந்தகவல்கள் மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சில முஸ்லிம் கடும்போக்குடைய அரசியல்வாதிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எனக்கு எதிராக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

ஜனாதிபதியையும் என்னையும் தொடர்புபடுத்தி ஆபாச வார்த்தைகளினால் திட்டி சிலர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சில தரப்பினர் பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஐம்பது ஆண்டு காலமாக சிங்கள – முஸ்லிம் நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு வருகின்றேன்.

பேருவளை, அளுத்கம சம்பவங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

நாட்டில் மீண்டும் போர் இடம்பெற அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு செவ்வியளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொலை மிரட்டல் தொடர்பில் அஸ்வர் எம்.பியிடம், பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.

 

SHARE