மகிந்த வந்தாலும், மைத்திரி வந்தாலும் தமிழினத்திற்கு விடிவு இல்லை – பாராளுமன்றத்தில் பா.அரியநேத்திரன் பா.உ

425

 

ஆட்சி மாற்றத்திற்குப் பின் புதிய நீதிஅமைச்சர் ரவிகருணநாயக்கா சமர்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் கடந்த மகிந்தரசு போல் போரினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையையும் தந்துள்ளது என மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இன்று (05/02/2015) பாராளுமன்றத்தில் இடைகால வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.அங்கு மேலும் உரையாற்றும் போது அவர் …

ariyam-aபுலம்பெயர்ந்த மக்களை நாட்டில் வந்து முதலீடுகளை செய்யுமாறு கூறுகிறீர்கள்.    உங்களை நம்பி எப்படி வரமுடியும். இலங்கையின் 67வது சுதந்திர தினம் நடைபெறும் போதே மத்தியநாடுகளில் வேலைவாய்புக்காக சென்றுநாடு திரும்பிய இருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஒருவர் மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்த 36 வயதான ஒரு பிள்ளையின் தந்தை கந்தசாமி கருணாநிதி ,கட்டாரில் இருந்து கடந்த 2ம் திகதி வரும்போது கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார் ,மற்றவர் கொக்கட்டிச்சோலை 9ம் வட்டாரத்தை சேர்ந்த 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தை தாமோதரம் பாஸ்கரன் டுபாய்யில் இருந்து கடந்த 3ம் திகதி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரின் குடும்பங்களும் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம்திகதி கொழும்புக்கு அழைக்கப்பட்டு 4 ஆம் மாடியில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது இதுதான் தமிழர்களின்சுதந்திரம்

,இதைவிட கடந்த 2ம் திகதி மட்டக்களப்பில் நகரில் கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரையாளர் மகேந்திரன் என்பவரின் வீட்டின் மீது  பெற்றோல் குண்டுதாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

நல்லாட்சியைப்  பற்றி கதைக்கிறீர்கள்  இதுதானா நல்லாட்சி? மகிந்தமாறி மைத்திரி வந்தாலும் தமிழர்களுக்கான அடாவடி குறையவில்லை இதற்காகவா நாம் மைத்திரியை ஆதரித்ததோம்.

வேலைவாய்பில்  கூட வடகிழக்கு இளையர்களுக்கு பாரபட்சம் குறிப்பாக நான் பிரதிநித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012/13ம்ஆண்டுகளில்பட்டம் பெற்ற சுமார் 180 பட்டதாரிகள் நியமனம் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டுள்ளனர் இவர்களுடன் அதே ஆண்டில் பட்டம் பெற்றவர்களெல்லாம் வேலைமேற்கொண்டுள்ள நிலையில் அவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் உரியநேரத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் அனுப்பாததன் காரணமாக இவர்கள் பாதிப்படைந்துள்ளனர்  கடந்த வாரம் கவனயீர்ப்பு போராட்டத்தையும் நாடாத்தியுள்ளனர் கடந்த அரசாங்கத்தில் பலமுறை இவர்கள் தொடர்பாக எடுத்துக்கூறியும் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை

எனவே100நாள் திட்டத்தில் இவர்களுக்கானவேலை வாய்புக்களை வழங்குவதுடன் பட்டம் முடித்து வேலையற்றுள்ள சகலபட்டதாரிகளுக்கும் வேலைவழங்க வேண்டும்.ஓய்வூதியமும் பெறுவோர்களுக்கு 1000ரூபா மட்டுமே கூட்டப்பட்டுள்ளது  இதுவும் அதிகரிக்கப்படவேண்டும். மொத்தத்தில் ஆட்சிமாறினாலும் வடகிழக்கு தமிழ்மக்களுக்கான எந்தநன்மையும் இந்த அரசு தரவில்லை எனவும் அரியம்,எம்.பி மேலும் கூறினார்.

SHARE