மங்கல்யான் விண்கலம் 33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும்: இஸ்ரோ

490

இந்தியாவின் மங்கல்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய வெறும் ஒன்பது மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இன்று தெரிவித்துள்ளது.

மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (MOM) அல்லது மங்கல்யான் என்ற விண்கலம் செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் போலார் சட்டிலைட் லான்ச் வெஹிகல் (polar satellite launch vehicle) மூலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் திகதி  செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலம் ஆகும்

‘மங்கல்யான் விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்திற்கு வெறும் ஒன்பது மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது என்று அறிவித்துள்ளது. இதுவரை பூமியில் இருந்து 189 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் மங்கல்யான் பயணித்துள்ளது. இன்னும் 33 நாட்களில் செவ்வாய் கிரக சுற்றுவட்டபாதையை சென்றடைந்துவிடும்’ என்று இஸ்ரோ நிறுவனம் இன்று அதனுடைய சமூக வலைப்பின்னல் தளத்தில் தெரிவித்துள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்கலத்தின் பாதையில் ஆகஸ்டு மாதம், முதல் பகுதியில் மூன்றாவது திருத்தம் செய்வதற்கு திட்டமிட்டனர், அதன் பின்னர் அந்த திட்டத்தை நிராகரித்துவிட்டனர்.

ரூ.450 கோடி மதிப்பிலான இந்த மங்கல்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் திகதி ஆந்திர பிரதேசம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பியது. மேலும், இந்த விண்கலம் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் திகதி செவ்வாய் கிரகத்தை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அனுப்பப்பட்டது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தி செவ்வாய் கிரகத்தை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அனுப்பப்பட்டது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

SHARE