மண்டேலாவிடம் பதக்கம் பெற்ற டிவில்லியர்ஸ்

511
தென் ஆப்பிரிக்காவின் அதிரடி துடுப்பாட்டகாரர் டிவில்லியர்ஸ் அனைவருக்கும் ஒரு கிரிக்கெட் வீரராக மட்டும் தான் தெரியும்.இவர் கிரிக்கெட் மட்டுமல்லாது பல போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை பெற்றவர். கிரிக்கெட்டில் இவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 7,168 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில், 6,331 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.மேலும் டி20 மற்றும் ஒருநாள் அணியின் அணித்தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.பல்துறை வித்தகராக உள்ள இவர் கிரிக்கெட் தவிர பல்வேறு போட்டிகளிலும் அசத்தியுள்ளார்.

* தென் ஆப்பிரிக்க ஜூனியர் ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

* தென் ஆப்பிரிக்க தேசிய கால்பந்து, ஜூனியர் அணியில் இடம் பெற்றுள்ளார்.

* தென் ஆப்பிரிக்க ஜூனியர் ரக்பி அணி கேப்டனாக இருந்தார்.

* பள்ளி அளவிலான நீச்சல் போட்டிகளில் ஆறு சாதனைகள் படைத்தார்.

* தென் ஆப்பிரிக்க ஜூனியர் தடகளத்தில், 100 மீ போட்டியில் வென்றுள்ளார்.

* ஜூனியர் டேவிஸ் கிண்ண அணியிலும் இவர் இடம் பெற்றார்.

* 19 வயதுக்குட்பட்ட பாட்மின்டன் தொடரில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றார்.

* அறிவியல் தொடர்பான இவரது ஆராய்ச்சிக் கட்டுரைக்கு, மறைந்த அதிபர் நெல்சன் மண்டேலாவிடம் இருந்து பதக்கம் பெற்றுள்ளார்.

SHARE