மண்ணை கவ்விய அவுஸ்திரேலிய அணி: 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

98

 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

சரிவில் இருந்து மீட்ட ஸ்ரேயாஸ்
இந்தியா-அவுஸ்திரேலியா இடையிலான 5வது டி20 போட்டி பெங்களுருவில் நடைபெற்றது, இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியாவின் தொடக்க வீரர்களான கெய்க்வாட் 10 ஓட்டங்களிலும், ஜெய்ஸ்வால் 21 ஓட்டங்களிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 ஓட்டங்களிலும், ரிங்கு சிங் 6 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆனால் பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். மேலும் அவருக்கு பக்க பலமாக ஜிதேஷ் ஷர்மா 24 ஓட்டங்களும், அக்சர் படேல் 31 ஓட்டங்களும் விளாசினர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 160 ஓட்டங்கள் குவித்தது.

இந்தியா வெற்றி
இதையடுத்து இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில், தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 28 ஓட்டங்கள் குவித்து நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தார். பென் மெக்டெர்மாட் தன் பங்கிற்கு 36 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசி 54 ஓட்டங்கள் குவித்தார்.

ஆனால் அவுஸ்திரேலிய அணியில் பின்னர் வந்த வீரர்கள் யாரும் சிறப்பான பங்களிப்பை அளிக்க தவறியதை அடுத்து, அவுஸ்திரேலிய அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

இதன் மூலம் 5வது டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

SHARE