மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி அதனை நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் கருவியாக சிலர் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்- ஜனாதிபதி

430
mahinda-pikku-01
பௌத்த மக்களை அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் நெருப்பை வெளியே கொடுத்து, வெளி நெருப்பை உள்ளே கொண்டு வந்து முழு நாட்டையே தீக்கிரையாக்க சிலர் முயற்சிக்கின்றனர்.

மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி அதனை நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் கருவியாக சிலர் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.

பௌத்த மக்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையிலான தகவல்களை இணையத்தில் பிரசுரித்து உலக நாடுகளில் பிரசாரம் செய்யும் முயற்சிகளை சிலர் மேற்கொள்கின்றனர்.

பல வருடங்களாக இரத்தம் சிந்தி ஈட்டிய வெற்றியை இல்லாமல் செய்ய முயற்சிப்பது தவறானதாகும்.

எந்தவொரு இடத்திலும் மதக் கடும்போக்குவாதத்திற்கு இடமில்லை.

 

நாட்டை கட்டியெழுப்ப ஒரு இன மக்களினால் மட்டும் முடியாது. சிங்கள. தமிழ் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியமானது.

நாட்டில் கலவரத்தை ஏற்படுத்துவதன் மூலம் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்களில் நேற்ற நடைபெற்ற பௌத்த மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE