பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத்துறை, அணுசக்தி விண்வெளி மற்றும் இலாகா ஒதுக்கப்படாத துறைகளையும் பிரதமர் நரேந்திர மோடி கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொள்கை ரீதியான முடிவுகளை பிரதமர் எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராஜ்நாத் சிங்- உள்துறை
- அருண்ஜெட்லி- நிதி, ராணுவம் மற்றும் கம்பெனிகள் விவகாரம்
- சுஷ்மா ஸ்வராஜ்- வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் நலன்துறை
- மேனகா காந்தி – பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
- நிதின் கட்காரி – தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து
- சதானந்த கவுடா – ரயில்வே
- ராம்விலாஸ் பஸ்வான் – உணவு மற்றும் சிவில் சப்ளை
- ரவிசங்கர் பிரசாத் – சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு
- ஸ்மிரிதி இரானி – மனித வள மேம்பாடு
- உமா பாரதி – நீர்வளத்துறை மற்றும் நதிகள் மேம்பாடு, கங்கை நிதி புனரமைப்புத்துறை
- அனந்த குமார் – ரசாயனம் மற்றும் உரத்துறை
- நஜ்மா ஹெப்துல்லா- சிறுபான்மையினர் நலத்துறை
- ராதா மோகன் சிங் – வேளாண்துறை
- கோபிநாத் முண்டே – கிராப்புற மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், துப்புரவு, குடிநீர்த்துறை
- வெங்கையா நாயுடு- நாடாளுமன்ற விவகாரம், நகர்ப்புற ஏழ்மை ஒழிப்பு, வீட்டு வசதித்துறை
- ஆனந்த் கீத்தே- கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை
- அசோக் கஜபதி ராஜூ- விமானத்துறை
- ஜூயல் ஓராம்- பழங்குடியினர் நலத்துறை
- ஹர்ஷ்வர்தன்- சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்
- நரேந்தர் சிங் தோமர்- சுரங்கம், எஃகு, தொழிலாளர், வேலைவாய்ப்புத்துறை
- கல்ராஜ் மிஸ்ரா – சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை
- ஹர்சிம்ரத் கவூர் பாதல்- உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைத்துறை
தனிப் பொறுப்புடன் கூடிய 10 இணை அமைச்சர்களுக்கான இலாகா விவரம்:
- நிர்மலா சீதாராமன் – வணிகம் மற்றும் தொழிற்துறை
- வி.கே.சிங்- வடகிழக்கு மண்டல மேம்பாடு மற்றும் வெளியுறவு, வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை இணையமைச்சராகவும் இருப்பார்.
- சந்தோஷ் குமார் கங்வார்- ஜவுளித்துறை
- தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
- ஸ்ரீபத் நாயக்- கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை
- பிரகாஷ் ஜவதேகர் – தகவல், ஒலிபரப்புத்துறை மற்றும் சுற்றுச்சுழல், வனம், பருவநிலை மாறுபாடு. இவர் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராகவும் பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- பியூஷ் கோயல் – மின்சாரம், நிலக்கரி, மாற்று மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை
- இந்திரஜித் சிங் ராவ்- புள்ளியியல், திட்ட அமலாக்கத்துறை, திட்டங்கள் துறை மற்றும் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- சர்பானந்த சோனோவால்- தொழில்முனைவோர், இளைஞர் நலன், விளையாட்டு, திறன் மேம்பாடு
- ஜிதேந்திர சிங்- அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல்துறை
இணை அமைச்சர்கள்
- பொன் ராதாகிருஷ்ணன்- கனரக ஆலை, பொதுத்துறை நிறுவனங்கள்
- சித்தேஸ்வரா- விமானத்துறை
- நிகல் சந்த்- ரசாயனம், உரத்துறை, குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை
- மனோஜ் சின்கா- ரயில்வேத்துறை
- உபேந்திர குஷ்வாகா- பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத்துறை
- கிரண் ரிஜ்ஜு- உள்துறை
- கிரிஷ்ன பால் குஜ்ஜார்- சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துறை
- சஞ்சீவ் குமார் பாலியான்- வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை
- மன்சுக்பாய் தாஞ்சிபாய் வசாவா- பழங்குடியினர் நலத்துறை
- ராவ் சாஹேப் தாதாராவ் பாட்டில் தன்வீ- உணவு மற்றும் நுகர்பொருள் விநியோகத்துறை
- விஷ்ணு தியோ சாய் – சுரங்க, ஸ்டீல், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
- சுதர்சன் பகத் – சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
|