மனசாட்சிப்படி அஜீத்தே அடுத்த சூப்பர் ஸ்டார்: கே.எஸ்.ரவிக்குமார்

413

கோலிவுட்டில் தற்போது எவ்வளவோ பிரச்சனை இருக்கலாம். ஆனால் தற்போது சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் ஒரு கருத்துக்கணிப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் முன்னனி வார இதழ் ஒன்று வெளியிட்ட கருத்துகணிப்பில் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பபட்டது.

இது அஜீத் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கருத்துகணிப்பில் உண்மையில் அதிகமான மக்கள் அஜீத்க்கு சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதி உள்ளதாக வாக்களித்தாக தகவல்கள் வெளியாயின. இது மேலும் சர்ச்சையை அதிகரித்தது. விஜய், அஜீத் ரசிகர்கள், பேஸ்புக், டுவிட்டர், மற்றும் வலைதளங்களில் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

தற்போது இந்தவிவகாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், ரஜினிகாந்த், விஜய், அஜீத் ஆகியோரது படங்களை இயக்கிய இயக்குனர் கே,எஸ். ரவிக்குமார் அடுத்து யார் சூப்பர் ஸ்டார் என்பது குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார், அதில்  “சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு யாராவது தகுதிக்குரியவர் என்றால், என் மனசாட்சிப்படி அஜித்துக்குத்தான் அதை அடையும் சாத்தியம் உள்ளது,” என்று தெரிவித்துள்ளார். தற்போதுதான் அடங்கிய சூப்பர்ஸ்டார் பிரச்சனை மீண்டும் ஆரம்பத்துள்ளது. இணைய தளங்களில் ரசிகர்கள் மோதிவருகின்றனர்.

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவகாரம் குறித்து  அஜீத்தோ,விஜயோ கண்டுகொண்தாகவே தெரியவில்லை அவர்கள் வேலையில் பிஸியாக  உள்ளனர்.

 

SHARE