மனீஷா வாய்ப்பை தட்டிப் பறிக்கவில்லை: நந்திதா சொல்கிறார்

603

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்காக சீனுராமசாமி இயக்கும் படம், இடம் பொருள் ஏவல். இந்தப் படத்தில் முதலில் விஜய் சேதுபதி ஜோடியாக வழக்கு எண் ஹீரோயின் மனீஷா நடிப்பதாக இருந்தது. இடையில் சீனு ராமசாமிக்கும், மனீஷாவுக்கும் ஏதோ ஒரு காரணத்துக்காக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனீஷா விலகிக் கொண்டார். அடுத்த நாளே அவரது கேரக்டருக்கு அட்டக்கத்தி நந்திதா தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கியது. மனீஷாவின் வாய்ப்பை பறிக்க நந்திதா போட்ட திட்டம்தான் இது என்று செய்திகள் வெளியானது.

இதுகுறித்து நந்திதா கூறியிருப்பதாவது: இடம் பொருள் ஏவல் பட வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்தது. முதலில் மனீஷா நடிக்க இருந்ததும், அவர் விலகியதும் எனக்குத் தெரியும். ஏன் விலகினாங்கன்னு தெரியாது. நானும் கேட்டுக் கொள்ளவில்லை. யாருடைய வாய்ப்பையும் தட்டிப் பறிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. விஜய் சேதுபதிக்கு ஜோடியா நடிக்கணும், சீனு ராமசாமி டைரக்ஷன்னு சொன்னாங்க. இரண்டு பேர் பற்றியும் எனக்குத் தெரியும், அதனால கதையே கேட்காமலேயே நடிக்க ஒத்துக்கிட்டேன்.
ஷூட்டிங்கிற்கு சென்ற பிறகுதான் கொடைக்கானல் பகுதியில் உள்ள ஒரு ஏழைப் பெண் கேரக்டர்னு தெரியும். மேக்அப் எதுவும் இல்லாம யதார்த்தமாக நடிக்கிறேன். என்னோட நடிப்புக்கு நல்ல தீனி போடுற கேரக்டர். வசனங்களை உணர்ந்து அனுபவிச்சு பேசி இருக்கேன். நானே டப்பிங் பேசவும் ஆசையோடு இருக்கேன் என்கிறார் நந்திதா.
SHARE