மன்னார் ஆயரைப் பிடித்துச் சிறையில் அடைத்தால் அதன் விளைவு என்ன என்பது பற்றி தெரிந்தும் கலகொட அத்தே ஞானசார தேரர் விளையாடுகிறார்

361

 

மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார். காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மீது நம்பிக்கை இல்லையென்று மன்னாரில் இடம்பெற்ற விசாரணையின் போது ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தமை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே கலகொட அத்தே ஞானசாரதேரர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக தேரர் மேலும் தெரிவிக்கையில், நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் தொடர்ந்தும் காட்டிக் கொடுக்கும் ராயப்பு ஜோசப்பை கைது செய்வதற்கு அரசாங்கம் ஏன் பின்னிற்கின்றது?

Mainnar-Besip (1)

ஆயர் ராயப்பு ஜோசப் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராகவும் எமது படையினருக்கு எதிராகவும் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ந்து கருத்துக்களை ராயப்பு ஜோசப் வெளியிட்டு வருகின்றார். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு அரசாங்கம் மௌனமாக இருக்கிறது. ராயப்பு ஜோசப் இலங்கையின் அரசியலமைப்பையும் சட்டங்களையும் மீறி செயற்படுகின்றார். இறுதிக் கட்ட யுத்தத்தில் எமது படையினர் கொத்து குண்டுகளை மக்கள் மீது பொழிந்தனர் என்றும் சர்வதேச ரீதியில் பிரசாரத்தை இவரே முன்னெடுத்தார்.

பாம்பு கடிக்கிறது என கூச்சலிட்டுக் கொண்டிருக்காமல் அப் பாம்மை அடித்துக் கொல்ல வேண்டும். அதேபோன்று தேசத்துரோக செயலில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் ராயப்பு ஜோசப்பை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

SHARE