மரம் நடுங்க ஆமிருக்கு சூர்யா அழைப்பு 

380
சென்னை: வில்லன் நடிகர் சுதீப், ஆமிர்கான், மகேஷ்பாபுக்கு சூர்யா சவால்விட்டிருக்கிறார்.மரம் நடும் பழக்கத்தை வளர்ப்பதற்காக திரையுலக பிரபலங்கள் சவால் போட்டியில் குதித்துள்ளனர். ஏற்கனவே இதில் பங்கேற்ற மம்முட்டி நடிகர் சூர்யாவுக்கு மரம் நடுவதற்கான சவால் விட்டார். அதை ஏற்று சூர்யா தனது வீட்டில் தென்னை மர கன்று நட்டார். பின்னர் அவர் வில்லன் நடிகர் சுதீப், மகேஷ்பாபு, ஆமிர்கான் ஆகியோருக்கு இந்த சவாலை விட்டிருக்கிறார். மேலும் தனது ரசிகர்களும் மரம் நடும் போட்டியில் பங்கேற்று தங்களால் இயன்ற அளவு மரங்களை நட்டு சுற்றுசூழல் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதேபோல் விஜய்க்கும் மம்முட்டி சவால்விட்டிருந்தார். அவர் அதை ஏற்றுக்கொண்டதுடன் பள்ளி மாணவ, மாணவிகள், சிறுவர்கள் இந்த சவாலை ஏற்று மரம் நட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

SHARE