விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில் புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் மலேசியாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இரகசிய நடவடிக்கைகளுடன்> வடக்கின் தமிழ் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் தொடர்பு பற்றிய விபரங்களை கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்கள் வெளிப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சந்தேக நபர்களிடம் இருந்த பெறப்பட்ட டி.வீ.டி காணொளி மூலம் இந்த இரகசியம் அம்பலமாகியுள்ளதாக பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று முக்கிய புலி உறுப்பினர்கள் மலேசியாவில் மறைந்து இருப்பதாகவும் அவர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸார் மூலமாக சிகப்பு அறிக்கை பிடிவிராந்தை பிறப்பிக்க புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
2007 ஆம் ஆண்டு முதல் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சர்வதேச வங்கி கணக்கின் மூலம் வெளிநாடுகளுக்கு சென்ற புலிகளின் உறுப்பினர் வாழ்ந்து வந்த விதம் பற்றியும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மலேசியாவில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்துள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அங்கிருந்து தமது அமைப்பிற்கு உயிரூட்டும் முனைப்புகளில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்