மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களினால் பொதுபல சேனா இயக்கம் வழி நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

437
images
வன்முறையை ஏற்படுத்தும் அரசாங்கம், வெளிநாடுகளில் முதலை கண்ணீர் வடிக்கிறது: மங்கள சமரவீர
அரேபிய நாடுகளில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முதலைக் கண்ணீர் வடித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா இயக்கத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் பேருவளை, அலுத்கம பிரதேசங்களில் முஸ்லிம்களை தாக்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் முஸ்லிம் மக்களை தாக்கி, மத்திய கிழக்கில் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களினால் பொதுபல சேனா இயக்கம் வழி நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கைப்பொம்மையாகவே பொதுபல சேனா இயங்கி வருகிறது.நாட்டில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் மற்றும் பொருளாதாரப் பின்னடைவுகளை மூடி மறைக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு இன, மத சமூகங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

SHARE