மாணவியை வீட்டுக்கு அழைத்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

215

 

ஹட்டன் பகுதியில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் கினிகத்தேனை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை அவரது வீட்டுக்கு அழைத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் தற்போது பணிபுரியும் பாடசாலைக்கு வருவதற்கு முன்னர் இந்த மாணவி கல்வி பயிலும் பாடசாலையில் பல வருடங்கள் பணியாற்றியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலதிக வகுப்பு முடிவடைவதற்குத் தாமதமானதால் தான் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்றதாகவும், தான் அங்கு சென்ற போது ஆசிரியர் தன்னுடன் தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும் பாடசாலை மாணவி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

பாடசாலை மாணவி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE