மாதவனின் கெஸ்ட்டாக தனுஷ் 

366
மாதவன் நடிக்கும் இந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் தனுஷ். தமிழில் கடந்த 2012ம் ஆண்டு வேட்டை படத்தில் நடித்து முடித்த மாதவன் பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்த தொடங்கினார். 2 இந்தி, 1 ஹாலிவுட் என 3 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மாதவன் நடித்த தனு வெட்ஸ் மனு என்ற இந்தி படத்தை இயக்கிய ஆனந்த் ராய் அப்படத்தின் 2ம் பாகம் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த ராஞ்சனா என்ற இந்தி படத்தை இயக்கியவர். தனுஷும், ஆனந்த் ராயும் மீண்டும் புதிய படத்தில் இணைந்து பணியாற்ற திட்டமிட்டிருக்கின்றனர்.

முன்னதாக மாதவன் நடிக்கும் தனு வெட்ஸ் மனு 2ம் பாகத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க தனுஷிடம் கேட்டிருக்கிறார் இயக்குனர். அவரும் ஓ.கே. சொல்லி இருக்கிறார். கமல், ரஜினிக்கு பிறகு இந்தியில் வெற்றி பெற்ற கோலிவுட் ஹீரோக்களாக வலம் வந்துகொண்டிருப்பவர்கள் மாதவன்தனுஷ் ஆகிய இருவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE