மாலத்தீவில் கலவரம்: ராணுவம் சுட்டதில் 36 பேர் பலி

530

மாலத்தீவில் அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் பிரிவினை கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த நவம்பரில் கிடல் நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

அதை தொடர்ந்து பிரான்ஸ் ராணுவம் தலையிட்டு தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டு ஒப்படைத்தது. தற்போது மீண்டும் தீவிரவாதிகள் தலை தூக்கி உள்ளனர்.

கிடல் நகரில் உள்ள விமான நிலையம் முன்பு தீவிரவாதிகளும், அவர்களது ஆதரவாளர்களும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கூடி கலவரத்தில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு எதிராக போர் பிரகடனம் செய்யப்பட்டது. எனவே, தீவிரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது.

அதில், 36 பேர் பலியாகினர் அவர்களில் 8 பேர் ராணுவ வீரர்கள். மற்ற 28 பேர் தீவிரவாதிகள் ஆவர். மேலும் 25 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே அரசு ஊழியர்கள் 30 பேரை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து சென்று விட்டனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

SHARE