மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இலங்கையில்…

799

 மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் இலங்கை வந்திருந்த போது அவருடன் துன்யா மாமூனும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இந்த நிலையில், இலங்கைக்கு ஏற்கனவே விஜயம் செய்துள்ள மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மாமூன் அப்துல் கையூமுடன் துன்யா மாமூன் இணைந்து கொண்டுள்ளார்.

சர்வதேச அரங்கில் இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என மாலைதீவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அலரி மாளிகையில் இன்று காலை சந்தித்த மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் துன்யா மாமூன் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இந்த சந்திப்பின் போது கல்வி, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உட்பட இரு நாடுகளின் நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மஹிந்தவின் அழைப்பின் பேரில் பொதுநலவாய தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி இலங்கை வந்துள்ளார். ஜனாதிபதியிடம் இன்று நடந்த சந்திப்பில், மாலைதீவு அமைச்சருடன் இலங்கைக்கான அந்நாட்டின் பதில் தூதுவர் டொக்டர் ஹூசைன் நியாசும் கலந்து கொண்டார்.Malatevu

SHARE