மீண்டும் மோதிக்கொண்ட தல, தளபதி.. திரையரங்க தெறிக்கவிட்ட ரசிகர்கள்..

38

 

சமீபகாலாமாக ரீ ரிலீஸ் கலாச்சாரம் பெருகி வருகிறது. பாபா, ஆளவந்தான், 3, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரீ ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் நல்ல வசூலையும் செய்கிறது என கூறப்படுகிறது. அந்த வரிசையில் நேற்று நடிகர்கள் விஜய், அஜித் இருவருடைய சூப்பர்ஹிட் திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

திரையரங்க தெறிக்கவிட்ட ரசிகர்கள்..
மற்ற நடிகர்களின் படங்கள் இதுவரை ரீ ரிலீஸ் ஆகி வந்த நிலையில், முதல் முறையாக விஜய் மற்றும் அஜித் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஒரே நாளில் இருவருடைய படங்களும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. விஜய்யின் திருமலை திரைப்படமும் அஜித்தின் வாலி திரைப்படமும் நேற்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஒவ்வொரு திரையரங்கிலும் திருமலை மற்றும் வாலி இரு திரைப்படங்களையும் திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடி வரும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

SHARE