முச்சக்கரவண்டியுடன் துவிச்சக்கரவண்டி மோதுண்டதில் மூவர் படுகாயம்

461
வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக, இன்று (20.05.2014) இரவு 8.30 மணியளவில் கன்டி வீதியால் வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் துவிச்சக்கரவண்டி மோதியதில் மூவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியின் சாரதியினால் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

தகவலும் படங்களும் :- இ.தர்சன்.
P1100535 copy
P1100531 copy
P1100529 copy
SHARE