முதலமைச்சர் விக்கிக்கும், அமைச்சர்கள் உறுப்பினர்களுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

368

ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் விசாரணைக்குழுவானது, தமிழ் மக்களுக்கு எதிரான சகல அட்டூழியங்களின் தன்மையையும் ஆராய்ந்து இன அழிப்பு (இனப்படுகொலை) இடம்பெற்றிருக்கிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, வடகிழக்கு மாகாணசபைகளின் 33 உறுப்பினர்கள், பதவியிலிருந்து ஓய்வு பெறும் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளமை தெரிந்ததே.

அக்கடிதத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன், பேரவை தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம் இருவரும் “சுயவிருப்பமின்மை, பூரண சம்மதமின்மை” காரணமாக கையொப்பமிட மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், வடக்கு மாகாணசபையை சேர்ந்த 28 உறுப்பினர்களும், கிழக்கு மாகாணசபையை சேர்ந்த 05 உறுப்பினர்களுமாக த.தே.கூட்டமைப்பின் 33 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

அக்கடிதத்தில் வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கையொப்பமிட்டமை தொடர்பில் கடும் அதிருப்தியும், விரக்தியும், வேதனையும், வெறுப்பும், கோபமும் அடைந்துள்ள விக்கி, இச்சம்பவத்தை தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத்தீர்மானம் கொண்டு வந்ததைப்போல உணர்வதாகவும் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் கடிந்து பேசியுள்ளார்.

இதனால் முதலமைச்சர் விக்கிக்கும், அமைச்சர்கள் உறுப்பினர்களுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கடும் அதிருப்தியும், விரக்தியும், வேதனையும், வெறுப்பும், கோபமும் அடைந்துள்ள விக்கியை சமாளிக்க அமைச்சர் ஒருவர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளார்.

“விக்கியின் விருப்பத்துக்கு மாறாக கையொப்பம் வைத்தது தப்பு தான். தெரியாமல் செய்து போட்டம். இது இவ்வளவு பெரிய விசயமா வரும் என்று சத்தியமா நாங்க நினைச்சுக்கூடப்பார்க்கேல்ல. அமைச்சர்கள் நாங்க விக்கியை சந்திச்சு மன்னிப்பு கேட்டு, எங்கள அறியாமல் தப்பு நடந்து போட்டுது. இத நாங்க வேணும் எண்டு செய்யேல்ல. நடந்தது நடந்திட்டுது. இனி என்ன செய்ய? இதற்குப்பரிகாரம் இல்லையா? மாற்று வழி என்ன? என்று தாம் கேட்க இருப்பதாகவும்,

மீடியாக்கள் தங்களுக்கு எதிராக ஏதாவது எழுதினால் தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்குமாறும்” குறித்த அமைச்சர் மாகாணசபை உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்டு வருகின்றார்.

vigneswaran-risad

குறித்த கடித விவகாரம் தொடர்பில் விவாதிப்பதற்காக, இன்று (19.08.2014) அவசர அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் விக்கி. இந்தக்கூட்டத்தில் அமைச்சர் டெனிஸ்வரன் தவிர, ஏனைய அமைச்சர்கள் ஐங்கரநேசன், சத்தியலிங்கம், குருகுலராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு பேசப்பட்ட விடையங்கள் மீடியாக்களுக்கு போய்ச்சேராமல் இரகசியம் காக்குமாறு அமைச்சர்களுக்கு விக்கியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE