முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து

798

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்காக முதல்&அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் ஆர்.சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் இணைந்து  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் இயக்கத்தை நல்ல முறையில் வழி நடத்தி சென்று, தமிழக மக்களின் நல்வாழ்வில் அக்கறை செலுத்தி, தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய ஒரே தலைவி ஜெயலலிதா தான் என்பதை நிரூபிக்கும் விதமாக நடந்து முடிந்த பாராளுமன்ற  பொதுத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் தங்களுடைய இயக்கம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.

 

SHARE