முதல் போட்டியிலேயே இந்திய அணிக்கு மரண அடி கொடுத்த இங்கிலாந்து

84

 

மகளிர் இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி பந்துவீச்சு
இங்கிலாந்து மற்றும் இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மும்பையில் நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தது. டன்க்லே ஒரு ரன்னில் ரேணுகா சிங் ஓவரில் போல்டு ஆனார்.

அரைசதம் விளாசிய வீராங்கனைகள் அதனைத் தொடர்ந்து வந்த கேப்சியும், தான் சந்தித்த முதல் பந்திலேயே ரேணுகா சிங் ஓவரில் போல்டு ஆகி வெளியேறினார்.

அதன் பின்னர் டெனில்லே வையட் (Danielle Wyatt) மற்றும் நட் சிவர் பிரண்ட் (Nat Sciver-Brunt) இருவரும் அதிரடியில் மிரட்டினர். இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இந்த கூட்டணி அடுத்தடுத்து அரைசதம் விளாசியது.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 197 ஓட்டங்கள் குவித்தது. வையட் 47 பந்துகளில் 75 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 8 பவுண்டரிகள்), நட் சிவர் 53 பந்துகளில் 77 ஓட்டங்களும் (13 பவுண்டரிகள்) எடுத்தனர்.

இந்திய அணியின் தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட்டுகளும், ஷ்ரேயன்கா பட்டீல் 2 விக்கெட்டுகளும், சாய்கா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஸ்மிரிதி மந்தனா ஏமாற்றம்
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தனா (6), ஜெமிமா (4) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

எனினும் கேப்டன் ஹர்மன்பிரீத் 26 ஓட்டங்களும், ரிச்சா கோஷ் 21 ஓட்டங்களும் தங்கள் பங்குக்கு எடுத்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா (Shafali Verma) அரைசதம் விளாசினார்.

ஷஃபாலி 52
42 பந்துகளை எதிர்கொண்ட ஷஃபாலி 9 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீராங்கனைகளால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாததால், இந்திய அணி 159 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

இங்கிலாந்து அணியின் தரப்பில் எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளும், சாரா கிளென், நட் சிவர் மற்றும் கெம்ப் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

 

SHARE