முன்னால் நீதி அரசரும் தற்போதய நீதி அமைச்சரும் இலங்கை அரசினால் அதிகாரமற்ற நிலையில் பல்லுப்புடுங்கிய பாம்புகளே

368

அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்குள் இலங்கை இந்த நாட்டின் யாப்பு குறித்த எமது நிலைப்பாடுகளை மிக தெளிவான முடிவுகளோடு, ஒத்த தன்மையுள்ள எல்லா சக்திகளுடனும் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம் என முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் நிதுp அமைச்சருமான ரவூப் கக்கீம் தெரிவித்தார்.

இலங்கi தமிழரசுக்கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்

SAMSUNG CAMERA PICTURES

இன்றைய அரசியல் சூழலில் ஆட்சியாளர்கள் தமது மேலாதிக்க செயற்பாடுகளை பலவீனமாக உள்ள எம்மீது பிரயோகிக்கின்ற தருணத்தில் இருக்கின்றோம். இந்த நிலையில் சரியான பிரக்ஞையோடு தமிழரசுக்கட்சியின் ஆரம்ப போராட்ட வழிமுறைகளை மீண்டும் கையில் எடுத்து, அதே தடயத்தில் பயணிக்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்கிறோம்.  மிகவும் இறுக்கமான சாத்தவீக போராட்டத்தின் களம் ஒன்று அமைய வேண்டிய அவசியத்தை நாம் மாத்திரமல்ல சிறுபான்மை இனத்திற்கு சகல உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துக்கின்ற அனைத்து சக்திகளும்  வலியுறுத்தும் தருணத்திலே உள்ளோம்.

SAMSUNG CAMERA PICTURES

இவ்வாறான கூட்டு முயற்சியும் தேவைப்பாடும் உணரப்படும் இவ் வேளையில் தமிழ் பேசும் முஸ்லீம் சமூகம் எமக்கிடையில் இருக்கின்ற, பிரதேச ரீதியான, பிராந்திய ரீதியான முரண்பாடுகள் குறித்த, ஆக்கபூர்வமான சினேகபூர்வமான பேச்சுக்களை மிகத்தொளிவாகவும் சரியான புரிந்துணர்வோடும் தாராளமான விட்டுக்கொடுப்போடும் எமது மனத்தில் நல் சிந்தனையை ஆக்கி கொள்ளவேண்டிய அவசியம் ஒவ்வொரு தலைமைக்கும் இருக்கின்றது என்பதனை உணர்ந்தவர்களாகவே இந்த அவைக்கு வருகை தந்திருக்கின்றோம்.

இந்த அடிப்படையில் நாம் தொடர்ச்சியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைகளோடு எமக்குள் உள்ள முரண்பாடுகளை களைந்து ஒருமைப்பட்டு எம்மை பிரித்தாள நினைக்கும் கபடத்தனமான அரசியல் தந்திரங்களை ஓரங்கட்டும் உறுதியுடனான ஒரு அரசியல் நிலைப்பாட்டை எமது சமூகம் சார்ந்து எடுக்க வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளது என திடமாக நம்புகின்றேன்.

SAMSUNG CAMERA PICTURES

தனியே தமிழ் பேசும் சமூகம் என வடக்கு கிழக்கில் வாழும் எம் இரு சமூகமும் அல்ல மலையகத் தலைமைகளோடும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை தொடர்;தும் ஆதரித்து வந்த இடதுசாரி தலைவர்களோடும் தெற்கில் வாழும் நேர்மையாக சிந்திக்கும் நடுநிலைவாதிகளோடும் நாம் பேசுவதற்கு முயலவேண்டும்.

உண்மையான கூட்டாட்சி தத்துவங்களின் சரியான பரிணாமங்களை மிக இலகுவான முறையில் கொண்டு செல்கின்ற அறிவுறுத்துகின்ற சினேகபூர்வமாக இந்த விடயங்களை பரிமாறி கொள்கின்ற பரந்து பட்ட கருத்தாடலை ஆரம்பிக்க வேண்டிய கடமைப்பாடு எங்களுக்கும் இருக்கின்றது என தெரிவித்தார்.

TPN NEWS

SHARE