முன்னாள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் அரவிந்த ஆப்தே மரணம்

439
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரர் அரவிந்த் லஷ்மண் ஆப்தே மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.

முதல்தர போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட அரவிந்த் லஷ்மண் ஆப்தே, தத்தாஜிராவ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியிலும் விளையாடியுள்ளார்.

1959ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, லீட்ஸ் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் நாரி காண்ட்ராக்டர் காயமடைந்ததால் அரவிந்த் ஆப்தே துவக்க வீரராக களமிறங்கினார். ஆனால் அந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 8 மற்றும் 7 ரன்களில் அவரை ஆலன் பார்டர் வெளியேற்றினார்.

58 முதல்தர போட்டிகள் மற்றும், பாம்பே அணிக்காக 14 போட்டிகள், ராஜஸ்தான் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடியுள்ள அரவிந்த் ஆப்தே, 6 சதம், 15 அரை சதம் உள்பட 2782 ரன்கள் குவித்துள்ளார். இவரது சகோதரர் மாதவ் ஆப்தேவும் இந்தியாவுக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அரவிந்த் நேற்று மாலை புனேயில் மரணம் அடைந்தார். அவருக்கு மகள் மற்றும் பேரன் உள்ளனர்.

SHARE