முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்

375

யாழ்ப்பாணத்தில் முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் மீது இனம் தெரியாத நபர்கள் நேற்று இரவு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது நல்லூர் செட்டிதெரு வீதியில் வைத்து இரவு இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத் தாக்குதலில் முகத்தில் காயம் அடைந்த நிலையில் விஜயகாந் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பொலிஸார் தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டு விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக விஜயகாந் தலைமையில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினர் கவனயீர்ப்பு போராடத்தினை நடாத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE