இச்சம்பவம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களிடம் தினப்புயல் இணையத்தளம தொலைபேசியில் தொடர்புகொண்டு; வினவியபொழுது, அப்பிரதேசத்தினைச் சேர்;ந்த நீதன் என்பவரை எமக்குத் தெரியாது. அன்ரனி ஜெகநாதன் அவர்கள் நீதனைப் பயன்படுத்தியதும் எங்களுக்குத் தெரியாது. அங்கு ஒரு இளைஞர் அணியை உருவாக்கும் நோக்கில் இளைஞர்களைத் திரட்டி, கூட்டம் ஒன்றினை ஒழுங்குசெய்தோம். இதில் இந்த நீதன் அவர்களும் ஒட்டிக்கொண்டதன் காரணமாக, அப்பிரதேச மக்கள் நீதன் என்பவர் கடந்த காலங்களில் மஹிந்த அரசுடன் இணைந்து செயற்பட்டவர் என்றும் அவரை இந்த இளைஞர் அணியின் செயற்பாடுகளுக்கு இணைத்துக்கொள்ளவேண்டாம் எனவும் கூறயதற்கமைய, அவரை நாம் அதிலிருந்து விலக்கிவிட்டோம். அப்பிரதேசத்தின் இளைஞர்கள் மற்றும் மக்களினது கருத்தினை ஏற்றுக்கொண்டு, அந்தப்புல்லுருவியை இக்கட்சியில் இணைத்துக்கொள்வதில்லை என அவர்களுக்கு வாக்குறுதியளித்தோம். அதனைத் தொடர்ந்து அமைதியான முறையில் கூட்டம் இடம்பெற்றது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கட்டுமானங்களை உடைப்பதற்கும், தமிழரசுக்கட்சிக்கு சேறுபூசுவதற்குமாக இப்பிரச்சினைகள் வேண்டுமென்றே திரிக்கப்பட்டு செய்திகளாக வெளிவந்துள்ளன. மக்கள் எம்மோடு இருக்கின்றார்கள். உண்மைக்குப்புறம்பான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள், நாம் தமிழர்கள், தமிழ் மண்ணை நேசிப்பவர்கள் என்பதனைக் கருத்திற்கொண்டு செய்திகளை வெளியிடுவது சிறப்பானதொன்றாகும் எனத்தெரிவித்தார்.