முல்லைத்தீவு சாட்சிகளை புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுக்கின்றனர் : அச்சத்தில் மக்கள்

519

முல்லைத்தீவு பிரதேச செயலகத்திற்கு உறவுகளை காணாது ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க வந்திருப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்களது செயற்பாடுகள் காணப்படுகின்றது.

இன்று காலை முதல் சாட்சியப்பதிவுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்கு வருகை தந்துள்ள புலனாய்வாளர்கள் சாட்சியமளிக்க வந்திருப்பவர்களை புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் சாட்சியமளிக்க வந்தவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

அத்துடன் மேலும் பலரை சாட்சியம் வழங்க செல்லக் கூடாது எனவும் அச்சுறுத்தியதாக வந்தவர்களில் சிலர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

SHARE