முள்ளிவாய்கால் அழிவில் கண்ணோக்கி பார்க்காத இந்தியா தமிழ் மக்கள் மீது தற்போது அக்கரை காட்டுவது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு என்பதாய் அமைகிறது

461

 l43-india-train-130819085326_big

ராஜபக்ச வருகையை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!தடுமாறும் தமிழக கட்சிகள்

 மோடி பதவியேற்பு விழாவில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளப் போவது இல்லை என அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறது. நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்கிறார். இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதால் தமிழக முதல்வர் ஜெயலலிதா விழாவை புறக்கணிப்பதோடு பிரதிநிதியையும் அனுப்ப மாட்டார் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பெங்களூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் கர்நாடக முதல்வர் சித்தராமையா மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட வேலைகள் இருப்பதால் கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை டெல்லி செல்லும்போது சாண்டி மோடியை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரளா மற்றும் கர்நாடக முதல்வர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார் ஜெயலலிதா

மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் தவிர திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே மோடியின் பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. ராஜபக்சே வருவதால் மோடியின் பதவியேற்பு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ராஜபக்சே வருவதையடுத்து மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் பதவியேற்பு விழாவுக்கு தனது சார்பில் பிரதிநிதி யாரையும் அனுப்பி வைக்கப் போவது இல்லை என்று கூறப்படுகிறது.

பாமக பங்கேற்பு.. குடும்பத்தோடு வருகிறார் விஜயகாந்த் – மதிமுக புறக்கணிப்பு

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது என்று தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதே சமயம் பதவியேற்பு விழாவை மதிமுக புறக்கணிக்கிறது. மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்ச கலந்து கொள்வதால் பதவியேற்பு விழாவை முதல்வர் ஜெயலலிதா புறக்கணிக்கிறார்.

இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியா ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பாஜகவின் அழைப்பை ஏற்று அவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள். பாமக தலைவர் ஜி.கே. மணி மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள். இதில் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே டெல்லிக்கு சென்றுவிட்டார். ஜி. கே. மணி இன்று காலை டெல்லிக்கு சென்றார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று இரவு அல்லது நாளை காலை குடும்பத்துடன் டெல்லிக்கு செல்கிறார். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் இன்று இரவு டெல்லி செல்கிறார். இந்நிலையில் ராஜபக்சவின் வருகையை கண்டித்து மதிமுக மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறது. ராஜபக்சேவின் வருகைக்கு எதிராக நாளை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்பு கொடி போராட்டம் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ச வருகையை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!தடுமாறும் தமிழக கட்சிகள்
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை ஜனாதிபதி  ராஜபக்ச வருவதை கண்டித்து சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கும், பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைப்பிடித்த கொள்கையையே தற்போது பாஜகவும் தொடர்வதாக மே 17 இயக்கத்தினர் குற்றம்சாட்டினர். இதே நிலை தொடருமானால் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலையே பாஜகவிற்கும் ஏற்படும் என்று எச்சரிக்கைவிடுத்தனர்.
இலங்கை அரசுடன் இந்திய அரசு கைக்கோர்த்தால் அதனை தமிழ்ச்சமூகம் ஒருபோதும் ஏற்காது என்றும் தெரிவித்தனர்.
அதேப்போன்று ராஜபக்சேவின் வருகையை கண்டித்து திருவள்ளூரில் ரயில் மறியல் செய்த சட்டக்கல்லூரி  மாணவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8.25 மணிக்கு திருவள்ளூர் ரெயில் நிலையம் வந்தது.
அப்போது திடீரென்று சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய படி ரயிலை நோக்கி ஓடினார்கள்.
ரயில் என்ஜின் மீது ஏறி நின்றபடி ரெயிலை போகவிடாமல் மறித்தனர்.ராஜபக்சவுற்கு அழைப்புவிடுத்த மோடிக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
சர்வதேச விசாரணைக்கு ராஜபக்ச ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இல்லாவிட்டால் இலங்கை தூதரகத்தை மூடக்கோரும் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் எச்சரித்தனர்
இந்நிலையில் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த போராட்டம் காரணமாக சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றதுமோடியின் பதவியேற்பு விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்‌ச பங்கேற்கும் விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் அணுகு முறை முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. பின்னணியில் அமைச்சரவையில் பங்
கு, மாநிலங் களவை உறுப்பினர் பதவி, வழக்கு களிலிருந்து தப்பிப்பது போன்ற பல்வேறு காரணங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.
ராஜபக்ச வருகை பற்றி கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், இலங் கையுடன் நட்புறவாக இருப்பதே ராஜதந்திரம் என்றார். ஆனால், அவரது நிலைப்பாட்டுக்கு எதிராக ராஜபக்‌சவை அழைத்திருப்பதை ஜி.கே.வாசன் கண்டித்துள்ளார்.
திமுகவும் மோடி பதவி யேற்பு விவகாரத்தில் மென்மை யான போக்கையே வெளிப்படுத்தியுள்ளது. வழக்கமாக இதுபோன்ற நேரங்களில், தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பான டெசோவைக் கூட்டி போராட் டங்களை அறிவிக்கும் கருணாநிதி, தற்போது ‘ராஜபக்‌ச பங்கேற்க வேண்டுமா என்பதை, மத்திய அரசு மீண்டும் ஒருமுறை சிந்தித்து அந்த முயற்சியைக் கைவிடுமாறு வேண்டுகிறேன்’ என்று கூறி அறிக்கை விடுத்துள்ளார். பாஜக அரசு மீது திமுகவின் மென்மை யான போக்குக்கு 2ஜி வழக்கும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘ராஜபக்‌சவை மட்டும் இந்த விழாவுக்கு அழைத்திருந்தால் தேமுதிக பங்கேற்றிருக்காது,’ என்று கூறி, விழாவில் பங்கேற் பதை மறைமுகமாக உறுதி செய்திருக்கிறார். மேலும் தேமுதிக இளைஞரணித் தலைவர் சுதீஷுக்கு மந்திரி பதவியும், மாநிலங்களவை எம்பி பதவியும் பாஜக வழங்கும் என்ற தகவல் இருப்பதால் தேமுதிக கடுமையாக எதிர்க்கவில்லை என்று தெரிகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தன் பங்குக்கு, ‘ராஜபக்‌சேவை அழைக்கும் முடிவை மறுபரி சீலினை செய்ய வேண்டும்’ என்று மட்டும் கூறியுள்ளார். இதன் மூலம், பதவியேற்பு விழாவை பாமகவும் புறக்கணிக்காது என்பது தெளிவாகிவிட்டது.
கடந்த 2008-ல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது, மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு விதிமீறி அனுமதி அளித்தது தொடர்பாக அவர் மீது சிபிஐ வழக்கு நிலு வையில் உள்ளது. இதனால், அவருக்கு அமைச்சரவையில் பதவி வழங்குவதை பாஜக இன்னும் உறுதி செய்யவில்லை. இந்நிலையில்தான் ராஜபக்ச விவகாரத்தில் நெருக்கடி கொடுக்க வேண்டாமென முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதிமுகவைப் பொறுத்தவரை, வைகோவுக்கு ராஜ்யசபா பதவி கிடைப்பதில் பல சிக்கல்கள் உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், ராஜபக்‌சவின் வருகைக்கு எதிரான போராட்டத்தை வைகோ கையிலெடுத்துள்ளார். அதேநேரம் போராட்டம் ஒருபுறம் இருந்தாலும் பதவியேற்பு விழாவில் பங் கேற்பது குறித்து வைகோ இன் னும் முடிவெடுக்கவில்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
SHARE