முள்ளிவாய்க்கால் தமிழர்களுக்கல்ல! படையினருக்கு இன்று அஞ்சலி!!

540

warcrims-5

முள்ளிவாய்க்காலில உயிரிழந்த மக்களிற்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசு அனுமதி மறுத்து வருகின்ற நிலையினில் குறித்த யுத்த வெற்றியினை நினைவு கூரும் வகையினில் அந்த யுத்தத்தில் பலியான இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வன்னியினில் நடத்தப்பட்டுள்ளது. இவ்வைபவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியினில் இலங்கை இராணுவத்தினால் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவு தூபிக்கு முன்பாக இன்று நடைபெற்றுள்ளது.

வடமாகாண ஆளுநரும் போர்க்குற்றவாளியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையிலேயே இந்த வைபவம் நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வினில் போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்ளிட்ட வன்னி கட்டளை தளபதிகள் பலரும் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்ட அரச அதிபர்களும் பங்கெடுத்திருந்தனர். அவர்களும் உயிரிழந்த படையினருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


 

SHARE