முள்ளிவாய்க்கால் படுகொலை சரணடைந்த போரளிகள் பொதுமக்களுக்கு நடந்தது? மற்றும் ஒரு ஆவணம் கதிகலங்கவைத்துள்ளது

912

eezham-genocide19

எங்கள் தேவதூதுவனின்
இறக்க முடியாத சிலுவையைப் போல் eezham-genocide13
என் மனக்கிடங்கினுள்ளும்
அமிழ்ந்து கிடக்கும் பளுவையும்
என்னால் இறக்க முடிவதில்லை!
ஓட ஓட விரட்டப்பட்டோம் eezham-genocide14
ஒன்றின் மேலொன்றாய்ப்
பிணமாய் வீழ்ந்தோம்
வீழ்த்தி விட்டோமென்ற
வெற்றிக்களிப்பில் இன்று நீ
வீழ்ந்து கிடக்கின்றாய்! பார்
விழிகளில் நீர் வழிய
வீதிகளில் நாங்கள் வெதும்பிக் கிடக்கின்றோம்
கொடி ஏற்றி, கொலு வைத்து
குடம் நிறைந்தது போலநிறைந்த
நிறைந்த எம் வாழ்வில்
குடியேற்றங்களுக்காய்க் காத்துக்கிடக்கின்றோம்
அகதிகளாகி! eezham-genocide15eezham-genocide17
அழகுதமிழ்ச் சோறும்
ஆடிக்கூழுமுண்ட எங்கள் வாயினுள்
பரிசென்று பால்சோறு திணிக்கின்றாய் நீ
புசிக்கின்றோம் பசித்த வயிற்றுக்காய் நாங்கள்,
பஞ்சபுராணங்களும், வேதங்களுமோதிய
புல்லாங்குழலிற்கும், நாதசுரத்திற்கும்
பண்சலைகளில் என்ன வேலை!
பிரித் ஓதுவதாய் பிதற்றுகிறாய் நீ
பிரித்துவைத்தது நீயென்றறியாமல்
பந்திவைத்து, பாய்விரித்து, படுத்துறங்கிய
எங்களுரின் கிளுவை மரநிழலின் கீழ்
அரசமரத்து புத்தன்
அவசர அவசரமாய் குடியேற
வெளியேறினோம் நாங்கள்
வெள்ளைக் கொடிபிடித்து
வீழ்ந்தவித்துக்களையும், விழுதெறியும் eezham-genocide27
பெருவிருட்சங்களையும்
நந்திக்கடலில் நட்டது பாதி, விட்டதுபாதியாய்
தப்பிபிழைத்தோமென்று தலைமேல் கைவைத்து
எம்பிரானைக் கூப்பித்தொழுது சரண்டைந்தோம்
ஆடைகள் களைந்து
அரையாண் கயிற்றினையும்
அறுத்தெறிந்து விட்டு
அம்மணமாகவே வாருங்கள்-இது 
அலரி மாளிகையின் உத்தரவு eezham-genocide23
போரின் விதி-எங்களை
வரவேற்கும் வாசல் கதவு
வாசகம்
எல்லாம் முடிந்ததென்ற
வெற்றிக்களிப்பில் இன்று நீ
முழுமையாக முடியாதவரை
முள்ளிவாய்க்கால் முடிவுமல்ல என்று

நாங்களும்… .. . .

eezham-genocide34

SHARE