முஸ்லீம் புலனாய்வை விலக்குவது அரசுக்கு ஆபத்து பொதுபலசேனவின் கருத்து முட்டாள்தனம்

453
அரச புலனாய்வு சேவையில் உள்ள அனைத்து முஸ்லிம் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு வலியுத்தியுள்ளது.

இது தொடர்பாக பொது பல சேனாவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான திலான் விஜேசிங்க, இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சார செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் விசேட புலனாய்வுப் பிரிவின் ஊடாகவே பொது பல சேனாவின் நடவடிக்கைகளுக்கான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பரபரப்பான தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இதற்கு முன்னதாக ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் நாட்டில் இல்லாத சமயத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப் போவதாக ஒரு குறுஞ்செய்தி தகவல் வெளியாகியிருந்தது.

பொது பல சேனாவின் உறுப்பினர்களிடையே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பகிரப்பட்ட அந்த தகவலை புலனாய்வுத்துறையில் உள்ள ஒரு சிங்கள அதிகாரியே வெளியில் கசிய விட்டிருந்தார்.

எனினும் இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் புலனாய்வுத்துறையில் உள்ள முஸ்லிம் அதிகாரிகளே இருப்பதாக பொதுபல சேனா நம்புகின்றது.

அதன் காரணமாக எதிர்காலத்தில் எந்தவித இரகசிய செயற்திட்டங்களையும் வகுக்க முடியாத நிலையை பொது பல சேனா எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையை தவிர்ப்பதாயின் புலனாய்வுத்துறையில் உள்ள முஸ்லிம் அதிகாரிகளை நீக்கினால் மட்டுமே சாத்தியப்படும் என்றும் பொது பல சேனா முக்கியஸ்தர்கள் நம்புகின்றனர்.

எனவே சிங்கள மக்கள் மத்தியில் தற்போது அதற்கான பிரச்சாரம் முன்னெடுக்கப்படத் தொடங்கியுள்ளது.  இதற்காக அவர்கள் வித்தியாசமான பிரச்சார அணுகுமுறையொன்றை கையாண்டுள்ளனர்.

அதாவது முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பயிற்றுவிக்கப்பட்ட சில முஸ்லிம் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகள் சிங்கள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தனது பிரச்சாரம் ஊடாக பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பான தகுந்த ஆதாரங்கள் எதனையும் பொதுபல சேனா குறிப்பிடவில்லை என்ற நிலையிலும் கூட இந்தப் பிரச்சாரத்திற்கு சிங்கள மக்களிடையே பரவலான ஆதரவு கிடைத்து வருவதாக தெரிய வந்துள்ளது.

 

SHARE