முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல் கிழக்கை நோக்கி நகரும் அபாயம்

343

 

batticalo_CI     images (4)

கடந்த மாதம் பிரித்தானியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக்குழுவிடம் எச்;சரிக்கையுடன் கூடிய ஒரு செய்தி தமி ழர் தரப்பினால் வழங்கப்பட்டிருந்தது. கடந்த 25.05.2014 அன்று லன்டனில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக்குழுவுக்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற ஒரு முக்கிய சந்திப்பின் பொழுது தமிழர் தரப்பினால் இந்தச் செய்தி முஸ்லிம் காங்கிரசிற்கு வழங்கப்பட்டது. தமக்கு இரகசியமா கக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தாம் இந்த எச்சரிக்கையை விடுப்பதாக தமிழர் தரப்பு தெரிவித்திருந்தது.

கிழக்கில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை சில தமிழ் வன்முறையாளர்களைக்கொண்டு மேற் கொள்வதற்கு இலங்கைப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டு வருவதாகவும், இதன் மூலம் தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு இலங்கை இராணுவத்தின் ஒரு பிரிவு திட்டமிட்டு வருவதாகவும், தமிழர் தரப்பு இலங்கை முஸ்லிம் காங்கிரசிடம் தெரிவித்திருந்தது.
இந்தச் சதிநடவடிக்கைக்காக இலங்கை அரச படைகளுடன் இணைந்து செயற்பட்டுவரும் சில முஸ்லிம் இளைஞர்களும், தமிழ் ஆயுதக் குழுவான பிள்ளையான் குழு உறுப்பினர்கள் சிலரும் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த இரகசியத் தகவலில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.JP42712

புலனாய்வுப் பிரிவின் பின்னணி
புலம்பெயர் தேசங்களில் செயற்பட்டுவரும் மிக முக்கியமான தமிழர் தரப்பினால் கடந்த மாதம் வழங்கப்பட்ட இந்த இரகசியத் தகவலை முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்கள் எத்தனை தூரம் பாரதூரமாக எடுத்தார்களோ தெரியவில்லை, ஆனால் கடந்த சில நாட்களாக தென் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள வன்முறை நடவடிக்கைகள், அந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் இருப்பதாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது போன்ற சம்பவங்கள், பிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் தமிழர் தரப்பால் முஸ்லிம் காங்கிரசிற்கு வழங்கப்பட்டிருந்த எச்சரிக்கையை ஓரளவு உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றது.

இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுகள் அனைத்தும் இலங்கை பாதுகாப்புச் செயலா ளர் கோத்தபாய ராஜபக்ஷவின் இறுக்கமான நேரடிக் கட்டுப்பாட்டின் கீழேயே செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று பொது பல சேனா என்ற பௌத்த பேரினவாத அமைப்பும், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மறைமுக நெறிப்படுத்தலில், அவரினால் நேர டியாக வழங்கப்படும் நிதி உதவியோடு,

images (2)images

வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்த இரகசியம்.
இலங்கையில் முஸ்லிம் இனத்தவர்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட வன்முறைகளைப் பிரயோகித்துவரும் பொதுபல சேனா என்ற பௌத்த பேரினவாத அமைப்பின் பின்னணியில் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் நஜீத் இந்திக பகிரங்கமாக 17.06.2014 அன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவயலா ளர் மாநாட்டில் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு, பொதுபல சேனா அமைப்பு 2013 மார்ச் 9ம் திகதி காலி யில் உருவாக்கிய பௌத்த தலைமைத்துவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பௌத்த தலைவர்கள்தான் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை திட்டமிட்டு, நெறிப்படுத்தி, தலைமைதாங்கி நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த பௌத்த தலைமைத்துவ பயிற்சி மையத்தினை ஆரம்பித்துவைத்தது இலங்கையின் பாதுகாப்பு செயலா ளரும், இலங்கை ஜனாதிபதியின் சகோ தரருமான கோத்தபாய ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கது.

images (3) 140616225803-sri-lanka-aluthgama-9-horizontal-gallery

எனவே இலங்கையில் வாழும் முஸ்லிம் இனத்தவர் மீது பொது பல சேனா என்ற அமைப்பினால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இன வன்முறை நடவடிக்கை என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட வன்முறை (ளுவசரஉ வரசயட எழைடநnஉந) நடவடிக்கை என்பதுடன், இந்த வன்முறை நடவடிக்கைகள் நவீ னகாலத் துட்டகைமுனுவாக தம்மை சரித்திரத்தில் பதியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மஹிந்த- கோத்தபாய ராஜபக்ஷ தலைமையி னால் திட்டமிடப்பட்டு, இலங்கைப் புலனாய்வுப்பிரிவினால் மிக மிக இலாவ கமாக நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு செயற்பாடு என்பதில் எந்தவிதச் சந்தேகமும் கிடையாது.

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் என்ற நிகழ்ச்சித் திட்டத்தை தென் இலங்கைக்கு அடுத்ததாக, கிழக்கை நோக்கி இலங்கை இராணு வப் புலனாய்வாளர்கள் நகர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பும், அச்சமும் தற்பொழுது எழுந்து வருகின்றது. இந்த இடத்தில் சில கேள்விகள் எழும்பலாம். எதற்காக கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை இலங்கை தரப்பு ஏற்படுத்தவேண்டும்?, கிழக்கில் தமிழ் முஸ்லிம் கலவரம் உருவாக்கப்படுவதற்கான அவசியம் என்ன?, இலங்கைப் புலனாய்வுப் பிரிவு நினைத்த மாத்திரத்தில் கிழக்கில் வன்முறையை உருவாக்கிவிடமுடியுமா?

மேலே உள்ள கேள்விகளில் முதல் இரண்டு கேள்விகளுக்கான பதிலைப் பார்ப்பதற்கு முன்னால் மூன்றாவது கேள்விக்கான பதிலை முதலில் பார்த்துவிடுவது நல்லது என்று நினைக்கின்றேன். அண்மைக் காலத்தில் நடைபெற்ற சில சம்பவங்களை நாம் மீட்டுப் பார்ப்பதானது, மேலே உள்ள மூன்றாவது கேள்விக்கான பதிலையும், புரிதலையும் நாம் பெற்றுக்கொள்ளப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன். 2002ம் ஆண்டு ஒக்டோபர் 15ம் திகதி, அக்கரைப்பற்றில் அப்துல் வஜீட் என்ற 24 வயது முஸ்லிம் வாலிபன் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட வாலிபன் ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்தவன் என்பதால், இது புலிகளின் வேலையாகத்தான் இருக்கவேண்டும் என்று கூறிக் கொதித்தெழுந்த அப்பிரதேச முஸ்லிம்கள், ஆர்ப்பாட்டம், ஹர்த்தால், கடையடைப்பு என்று இறங்கியிருந்தனர். தமிழ் மக்களை தாக்கி, வன்முறைகளில் அவர்கள் இறங்கிவிடக்கூடிய அபாயமும் அங்கு காணப்பட்டது. முஸ்லிம் இளைஞ னைக் கடத்தியது விடுதலைப் புலி களே என்று அத்தாவுல்லா போன்றவர்கள் அடித்துப் பேசினார்கள். முஸ்லிம்களைத் தூண்டும் வகையில் ஆவேசமாக அறிக்கைகளையும் விடுத்தார்கள்.

அப்பிரதேசத்தில் மூன்று தினங்கள் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நிலமை மிக மோசமாக இருந்தது. தமது அமைப்பிற்கும் இந்தக் கடத்தலுக்கும் சம்பந்தமில்லை என்று விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்த போதிலும் அவர்களை நம்புவதற்கு எவரும் தயாராக இருக்கவில்லை. இச்சம்பவம் நடைபெற்று மூன்றாம் நாள் 18ம் திகதி வெள்ளிக் கிழமை அதிகாலை, கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டவரின் வீட்டை பொலி ஸார் திடீரென்று சுற்றிவளைத்தபோது, குறிப்பிட்ட வாலிபன் தனது வீட்டில் சாவகாசமாக அமர்ந்திருப்பதைக் கண்டு அவனைக் கைது செய்தார்கள். தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத்தொடர்ந்தே அந்த வாலிபனின் வீட்டில் தாம் தேடுதல் நடாத்தியதாக பொலிஸார் தெரிவித்திருந்தார்கள்.

death

கைதுசெய்யப்பட்டு பொலி ஸாரால் விசாரிக்கப்பட்ட அப்துல் வஜீட் என்ற அந்த வாலிபன், வெளிநாடு செல்வதற்கு தனக்கு பணம் தேவைப்பட்டதால், இந்த கடத்தல் நாடகத்திற்கு தான் சம்மதித்ததாக தெரிவித்தான். இந்தக் கடத்தல் நாடகத்தின் பின்னணியில், ஈ.பி.டி.பி. அமைப்பினரும், முஸ்லிம் குழு ஒன்றும் இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல் பழியை புலிகள் மீது போட்டுவிட்டு, புலிகளால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வெளி உலகிற்கு காண்பிக்க இந்த கடத்தல் நாடகம் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. அதுவும் நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் மற்றும் நோர்வே தூதுக் குழுவி னர் இலங்கை வந்து புலிகளின் தலை வரைச் சந்தித்து அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் பற்றி ஆராய இருந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த கடத்தல் நாடகம், புலிகளுக்கும், சமாதான முயற்சிகளுக்கும் ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. டோக்கியோ மாநாட்டில் விடுத லைப் புலிகள் கலந்துகொள்வது பற்றிய இழுபறி நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில், புலிகளுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் நோக்கத்தில்;, மற்றொரு தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தைத் தூண்டும் முயற்சியாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் இந்தச் சதி மேற்கொள்ளப்பட்டிருந்தது. (அன்றைய காலகட்டத்தில் இலங்கை காவல்துறை பிரதம மந்திரி ரனிலின் தலைமையிலும், இராணுவத்தினர் ஜனாதிபதி சந்திரிகா தலைமையின் கீழும் செயற்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது)

2003ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி நள்ளிரவு ஹூசைன் என்ற 27 வயது முஸ்லிம் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் கிண்ணையடி என்ற தமிழ் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓட்டைமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களில் பதட்டநிலை ஏற்பட்டதுடன் தமிழ், முஸ்லிம் கலவரம் ஒன்றும் தோன்றுவதற்கான ஏதுநிலை உருவானது. வழமை போலவே, இந்தச் சம்பவம் விடுதலைப் புலிகலா லேயே மேற்கொள்ளப்பட்டதாக முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்திருந்தார்கள். ஒருவேளை புலிகள்தான் இதனைச் செய்திருப்பார்களோ என்று தமிழ் மக்களே அஞ்சும் அளவிற்கு, இந்தக் கொலை பற்றிய பிரச்சாரங்கள் கச்சிதமாக கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. ஆனால் இந்தக் கொலைச் சம்பவத்தின் உண்மையான சூத்திரதாரிகள் ஒரு மாதம் கடந்த நிலையில் பொலிஸாரி னால் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் பற்றிய உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன.

நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஹூசைன் என்ற அந்த இளைஞன், ஓட்டைமாவடியில் தனியார் மருத்துவமனை ஒன்றை நடாத்திவரும் பெண் வைத்தியருடன் காதல் தொடர்புகளை வைத்திருந்தார். அடிக்கடி அவர் ஓட்டைமாவடி வந்து பெண் வைத்தியருடன் தங்கியும் செல்வது வழக்கம். யாராவது கேட்டால், அது தனது உறவுக்காரப் பெண் என்று கூறிச் சமாளித்துவிடுவார். அதேவேளை, அந்த பெண் வைத்தியருடன் ஏற்கனவே தொடர்பு வைத்திருந்த ஹஜ்ஜி என்ற இலங்கை இராணுவ உயரதிகாரி, வைத்தியரின் இந்த புதிய உறவை அறிந்து மிகவும் கோபம் கொண்டார். சரியான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அவர், 15.05.2003 அன்று ஹூசைனை வான் ஒன்றில் கடத்திச் சென்று கொலைசெய்துவிட்டார். பிணத்தை ஆட்டோ ஒன்றில் எடுத்துச் சென்று மிராவோடை-கிண்ணையடி வீதி யில், தமிழ் பிரதேசத்தில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.
தீவிர விசாரணையை மேற்கொண்ட வாழைச்சேனைப் பொலிஸார், இராணுவ அதிகாரி ஹஜ்ஜியையும், ஆட்டோச் சார தியையும், வேறு சில இராணுவ வீரர்களையும் கைது செய்தார்கள். இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவில், தமிழ் குழு உறுப்பினர்களின் நடவடிக்கைக்கு பொறுப்பாக இருக்கும் கப்டன் ஹஜ்ஜி இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதால்தான், இந்த கொலை பற்றிய சந்தேகம் பெண் பிரச்சினை என்பதைக் கடந்து இரணுவச்சதி என்ற கோணத்திலும் பார்க்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞனின் பிணம் தமிழ் பிரதேசத்தின் மத்தியில் போடப்பட்டதானது, தமிழ்-முஸ்லிம் இனக்கலவரம் ஒன்றை தூண்டிவிடும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது என்ற கோணத்தில் ஆராயப்பட்டபொழுது, இந்த விசாரணைகள் தொடர்பாக சற்று அடக்கி வாசிக்கும்படி விசாரணையை மேற்கொண்ட வாழைச்சேனைப் பொலி ஸாருக்கு மேலிடத்தில் இருந்து பலத்த நெருக்குதல்கள் வர ஆரம்பித்தன.

21.05.2003 அன்று புதன் கிழமை, விடுதலைப் புலி உறுப்பினரான பூவண்ணன் (காத்தமுத்து கோணேஸ்வரன்) என்பவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் நிந்தவூர் என்ற முஸ்லிம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் மக்களை கிளர்ந்தெழச் செய்யவும் காரணமாக இருந்தது. கொலை செய்யப்பட்ட பூவண்ணன், விடுதலைப்புலிகளின் தேசியப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர். காரைதீவு பனிமணையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்.

இவர் கொலை செய்யப்பட்டதும், இவரது உடல் தனி முஸ்லிம் கிராமம் ஒன்றின் நடுவில் கண்டெடுக்கப்பட்டதும், விடுதலைப் புலி உறுப்பினர்கள் மத்தியிலும் பாரிய சினத்தை ஏற்படுத்தியிருந்தது. எந்த நேரத்திலும் எதுவும் நடந்துவிடலாம் என்று மக்கள் அச்சம் அடைந்திருந்த நேரத்தில், விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு-அம்பாறை அரசியல்துறைப் பணியகம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. ஷதமிழ், முஸ்லிம் மக்கள் விழிப்பாக இருங்கள்| என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், ஷஷகாரைதீவில் வைத்து ஈ.பி.டி.பி. கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட பூவண்ணன் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் முஸ்லிம் கிராமமான நிந்தவூரில் போடப்பட்டதாகத்|| தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் குரோதத்தை தோற்றுவித்து இரு சமுகங்களுக்கும் இடையில் இனமோதலை ஏற்படுத்தி வேடிக்கை பார்க்கும் நோக்கத்தில் இந்தச் சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக|| புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள். ஷநாட்டில் தற்பொழுது தோன்றியுள்ள அமைதிச் சூழலை சிர்குலைத்து, மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தி சுயலாபம் தேட முனையும் தீய சக்திகள் தற்பொழுது இதுபோன்ற சதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த விடுதலைப் புலிகள், இதனையிட்டு தமிழ் முஸ்லிம் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என்றும் கோரியிருந்தார்கள்.
பெரிய அளவில் உருவாக இருந்த தமிழ்-முஸ்லிம் கலவரம் ஒன்று, விடுதலைப் புலிகளின் சரியான கணிப்பீடு காரணமாக தற்காலிகமாக தனிக்கப்பட்டது.

7803119572_c2a3e096aa_z

30.11.2001 அன்று ஓட்டைமாவடி, மாவடிச்சேனை போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட தமிழ்-முஸ்லிம் மோதல்களின் பின்னணியில் ஸ்ரீலங்கா அரச படைகள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்ததை கல்குடா தொகுதி பள்ளிவாயல் நிறுவணங்களின் சம்மேளணம் பின்னர் அம்பலப்படுத்தியிருந்தது. ஓட்டைமாவடி இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து 29.11.2001 கைதுசெய்யப்பட்டிருந்த வாகரையைச் சேர்ந்த மணாளன் மகேசன் என்ற மீன் வியாபாரி மறுநாள் கொலைசெய்யப்பட்டு; பிணமாக முஸ்லிம் பிரதேசமான மாவடிச்சேனையினுள் போடப்பட்டார். இதனைத் தொடர்ந்தே தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் ஆரம்பமானது. தமிழ்-முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்தச் செயல் இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டதாக பள்ளிவாயல்கள் சம்மேளனம் தெரிவித்திருந்தது.

சம்பவம் 5:
1990ம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானதைத் தொடர்ந்து மட்டக்களப்பைக் கைப்பற்றிய ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் இளைஞர்கள் பலரைக் கொலை செய்து ஷடயரில்| போட்டு எரியூட்டியது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் அகதிகளாக இருந்த 168 தமிழர்கள் இராணுவத்தினால் அழைத்துச்செல்லப்பட்டு பின்னர் காணாமல் போணார்கள்.. இதேபோன்று மட்டக்களப்பிலுள்ள தன்னாமுனை, சத்துறுக்கொண்டான், குடியிருப்பு போன்ற கிரமங்களும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்காணவர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் காணாமல்போனார்கள். இப்படி பல அப்பாவித் தமிழ் மக்கள் காணாமல்போன சம்பவங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்களிடம் பரவலாகப் பேசப்பட்ட ஒரு பெயர் ஷகப்டன் மொனாஸ்| ஆகும். இலங்கை இராணுவத்தில் 1990 ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவில் (ஆடைவையசல ஐவெநடடபைநnஉந ஊழசிள) மட்டக்களப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக செயற்பட்ட |கப்டன் மொனாஸ்| மட்டக்களப்பில் இடம் பெறும் சுற்றிவளைப்புக்களின் போது இராணுவத்தினாரால் அழைத்துவரப்பட்ட மக்கள் முன்பு உரையாற்றும்போது,ஷஷநான் ஒரு நல்ல முஸ்லிம். அல்’hவைத் தவிர வேறு எவருக்கும் நான் பயப்படமாட்டேன்|| என்று தவறாமல் தெரிவிப்பார்.
ஷகப்டன் மொனாஸ்| என்ற பெயர் அக்காலங்களில், அதுவும் குறிப்பாக மட்டக்களப்பில் தமிழ்-முஸ்லிம் உறவுகளில் என்றுமில்லாத விரிசல்கள் ஏற்பட்டிருந்த 1990ம் ஆண்டு காலப்பகுதியில் சாதாரண தமிழ் மக்களிடையே பயத்துடனும், வெறுப்புடனும் பிரசித்திபெற்றிருந்தது.
ஆனால் இத்தனைக்கும் ஷகப்டன் மொனாஸ்| என்பவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர். நீர்கொழும்புப் பிரதேசத்தைச் சேர்ந்த இவரது உண்மையான பெயர் ஷபீரிஸ் மார்ட்டின்| என்று பின்னாளிலேயே தெரியவந்தது. பின்நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் (ஆடைவையசல ஐவெநடடபைநnஉந னுசைநஉவழசயவந) ஒரு பொறுப்புவாய்ந்த பதவியில் அமர்த்தப்பட்ட இந்த சிங்கள கிறிஸ்தவ அதிகாரியை திட்டமிட்டு முஸ்லிம் பெயரில் மட்டக்களப்பிற்கு அனுப்பி, தமிழ் முஸ்லிம் விரோதத்தை வளர்ப்பதில் ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவு தீட்டியிருந்த திட்டம் பற்றி பின்நாட்களிலேயே சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. அரச படைகள் மீது தமிழ் மக்களுக்கு இயல்பாகவே தோன்றக்கூடிய வெறுப்புணர்வுகளை, முஸ்லிம் சமுகத்தின் மீது திருப்பிவிடுவதில் சிங்கள அரசாங்கம் எப்படி திட்டமிட்டு செயற்பட்டது என்பதற்கு உதாரணம்தான் ஷகப்டன் மொனாஸ்| என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள்.

நினைத்தால் முடியும்
மேலே கூறப்பட்டவை வெறும் உதாரணங்கள் மாத்திரம்தான்.
கிழக்கில் இடம்பெற்ற தமிழ் முஸ்லிம் வன்முறைகளின் பின்னணியில் சிறிலங்காப் புலனாய்வாரளர்களின் சதிக்கரங்கள் இருந்த சந்தர்ப்பங்கள் ஏராளம் இருக்கின்றன. (அதற்காக கிழக்கில் நடைபெற்ற இன வன்முறைச் சம்பவங்களில் தமிழ் விடுதலைப் போராட்ட அமைப்புக்களோ அல்லது முஸ்லிம் ஆயுதக் குழுக்களோ முற்றாகவே சம்பந்தப்படவில்லை என்று நான் கூறவரவில்லை.)

அதாவது மேலே சுட்டிக்காண்பிக்கப்பட்ட சம்பவங்களைப் பார்க்கின்ற பொழுது ஒரு விடயத்தை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். சிறிலங்காப் புலனாய்வாரள்களைப் பொறுத்தவரையில் அவர்கள் நினைத்தால் கிழக்கில் மிக இலகுவாக ஒரு இன வன்முறை நடவடிக்கையை உருவாக்கிவிடமுடியும் என்பதில் சந்தேகம் இல்லை. சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் இளைஞர்களையும், பிள்ளையான், கருணா போன்ற முஸ்லிம்கள் மீது மிகுந்த வெறுப்புணர்வுகொண்ட முன்னாள் புலி உறுப்பினர்களையும் கொண்டு மிக இலகுவாகவே கிழக்கில் ஒரு தமிழ் முஸ்லிம் வன்முறையை சிறிலங்காப் புலனாய்வாரள்களால் உருவாக்கிவிட முடியும்.

சரி இனி அடுத்த கேள்விக்கு வருவோம்
• எதற்காக கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை சிறிலங்கா தரப்பு ஏற்படுத்தவேண்டும்?

நான் முன்னரே குறிப்பிட்டதன் பிரகாரம் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறை என்பது மகிந்த அரசாங்கத்தினால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சிநிரல்.
இலங்கையைப் பொறுத்தவரையில் பௌத்த சிங்கள இனம் என்பது ஒரு பெரும்பாண்மை இனம் என்று கருதப்பட்டாலும், பூமிப்பந்தில் தாம் ஒரு சிறுபாண்மையினமே என்பதுதான் பௌத்த சிங்களவர்களுக்கு இன்றிருக்கின்ற மிகப் பெரியதொரு கவலை. அச்சம். ஆதங்கம்.
தேரவாத பௌத்தத்தை என்னவழிப்பட்டும் காப்பாற்றியேயாகவேண்டிய மிகப்பெரியதொரு அவசியம் சிங்கள மக்களுக்கு இன்று இருக்கின்றது. அந்தப் பணியைச் செய்யக்கூடிய ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ஷ மாத்திரம்தான் என்பதில் சிங்கள அடிப்படைவாதிகளுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.

மகிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் தன்னை ஒரு நவீனகாலத் துட்டகெமுனுவாக சிங்கள சிறிலங்கா வரலாற்றில் பதிப்பதென்பது அவரது முழுமையான கனவு.
வெல்லப்பட முடியாத யுத்தம் என்று அனைவருமே நம்பிக்கொண்டிருந்த சிறிலங்கா-புலிகள் யுத்தத்தை முடிவுக்குக்கொண்டுவந்து தமிழர்களை கிட்டத்தட்ட சிங்களத்தின் முழுமையான அடிமைகளாக மாற்றிவிடுவதில் வெற்றிகண்டுள்ள மகிந்த, நீண்டகால நோக்கில் சிங்களத்தின் பொருளாதாரத்திற்கும், மதப்பரம்பலுக்கும் ஒரு மிகப் பெரிய சவாலாக சிங்கள தேசத்தின் இதயத்தின் மையத்தில் குடிகொண்டபடி இருக்கும் முஸ்லிம்களை நோக்கி தனது பார்வையைத் திருப்புவார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
ஹலால் சான்றிதழில் ஆரம்பித்த முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறை தென் இலங்கையில் இருந்து முஸ்லிம்களை முற்றாகவே விரட்டி அடிக்கும்வரை ஓயமாட்டாது என்பதில் சந்தேகம் இல்லை. நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், மகிந்த குடும்பத்தின் அதிகாரம் ஆட்சிமையத்தில் இருந்து அகலுவதற்கு முன்பாக இது கட்டம் கட்டமாக நடந்தே தீரும் என்பதில் சந்தேகம் இல்லை.

கிழக்கு

இந்த நிகழ்சித்திட்டத்தில் கிழக்கு ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

தென் இலங்கையில் இருந்து வெளியேற்றப்படும் முஸ்லிம்கள் கிழக்கிற்குத்தான் முதலில் வருவார்கள். சிங்களவர்கள் மீது மிகவும் காழ்ப்புணர்வு கொண்ட மனநிலையில் வரும் தென் இலங்கை முஸ்லிம்களை அங்குள்ள தமிழ் மக்களுடன் இணையவிடுவது சிறிலங்கா தேசத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்படியாக அமைந்துவிடும்.
அதுமாத்திரமல்ல, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்பது இன்றைய மோடி அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 2.3 சரத்தின்படி வடக்கு கிழக்கு இணைவு தொடர்பான ஒரு சர்வஜன வாக்கெடுப்பு கிழக்கில் மேற்கொள்ளப்படவேண்டும். கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஏதோ ஒரு புள்ளியில் மன ஒருமைப்பாடு காணும் நிலை ஏற்பட்டுவிட்டால், வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாகவே இணைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுவிடும். இது சிங்கள தேசத்தின் எதிர்கால இருப்புக்கு நல்லதல்ல.

Hakeem - Prabha.img_assist_custom
தமிழீழம் சம்பந்தமான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கான சட்டசபைத் தீர்மானம் தமிழ் நாட்டில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சர்வஜன வாக்கெடுப்பொன்றைக் குறிவைத்துதத்தான் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் மும்முரமான நகர்வுகளை மேற்கொண்டபடி இருக்கின்றார்கள். இதுபோன்ற ஒரு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றிற்கான ஏதுநிலை ஒருவேளை ஐநா சபையினால் உருவாக்கப்படும் பட்சத்தில், அந்த வாக்கெடுப்பு வடக்கு கிழக்கு முழுவதிலும் நடைபெறும். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் கைகோர்த்தநிலையில் நிற்பது சிங்கள தேசத்திற்கு உகந்ததாக இருக்கமாட்டாது.
எனவே கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவு என்பது எந்தக் காலத்திலும் பிரிக்கப்பட்ட ஒரு நிலையிலேயே இருக்கவேண்டும்- சிங்கள தேசத்தின் இருப்பைப் பொறுத்தவரையில்.
இந்த நோக்கத்திற்காகத்தான் கிழக்கில் தமிழ் -முஸ்லிம் கலவரங்களை சிறிலங்கா தரப்பு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேசத்தின் கண்டனம்;?
உலகம் முழுவதினதும் பார்வை இலங்கை மீது இருக்கின்ற இந்தச் சந்தர்பத்தில் இந்தச் சதியை மேற்கொள்வதற்கு சிறிலங்காவை உலகம் அனுமதிக்குமா?
தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இதற்கு எதிராகக் குரலெழுப்ப மாட்டார்களா?
சிங்களப் புலனாய்வாரள்கள் மிகுந்த புத்திசாலிகள். ஒருவனுக்கு அடிக்கும் முன்பு அவனுக்கு பயங்கரவாத முத்திரையைப் பதித்து, அவனது உடல் முழுவதும் அந்தச் சாயத்தை பூசிய பின்புதான் அவர்கள் தாக்குவார்கள். பல தமிழர்களை, தமிழ் செயற்பாட்டாளர்களை, தமிழ் அமைப்புகளை இப்படிச் செய்துதான் முன்னர் தாக்கியிருந்தார்கள்.
இலங்கையில் தலிபான்கள் முஸ்லீம்களுக்குள் ஊடறுத்துவிட்டுள்ளதாகவும், தளமமைத்துச் செயற்பட்டு வருவதாகவும், உள்ளூர் முஸ்லிம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கி வருவதாகவும் ஏற்கனவே தமது ஊதுகுழல்கள் மூலமாக செய்தி பரப்பிவிட்டுள்ளார்கள்.
இலங்கையில் காத்தான்குடியில் மறைந்துள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இன்டபோல் கோரிக்கை விடுத்து வருகின்றது. இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான றோ நெருக்கடி கொடுத்து வருகின்றது. மேற்குலகப் புலனாய்வுப் பிரிவுகள் பலவும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. எனவே முஸ்லிம்களுக்கு எதிராக கிழக்கில் நடைபெறப்போகும் நடவடிக்கைக்கு சர்வதேச அழுத்தமோ அல்லது இந்தியாவில் இருந்து வரும் அழுத்தமோ வெறும் அறிக்கைகளைத்தாண்டி இருக்கமாட்டாது.

அடுத்ததாக கிழக்கில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த இருப்பது சிறிலங்காப் படைகள் அல்ல. தமிழர் தரப்பினைக் கொண்டுதான் கிழக்கில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட இருக்கின்றன. முஸ்லிம்கள் திருப்பித்தாக்கும் பொழுது தமிழர் தரப்பிற்கு ஏற்படும் தாக்கம் மாத்திரம்தான்; புலம்பெயர் தமிழர்களால், அவர்களுக்கு இன்று சர்வதேச மட்டத்தில் இருக்கும் தொடர்புகளைப் பாவித்து சர்வதேச நாடுகளுக்கு வழங்கப்படும். புலம்பெயர் தமிழர்களின் வாக்குவங்கியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மேற்குலகம் நிச்சயம் தமிழர் பக்கமாகத்தான் நிற்குமே தவிர முஸ்லிம்கள் மீது சிங்கள தேசத்தினால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட வன்முறையை ஒரு அளவிற்கு மேல் கண்டுகொள்ள விரும்பாது.
அப்படியானால் எமது அரசியல் தலைவர்கள்??
முஸ்லிம் அரசியல் தலைவர்களில் பலருடைய குடும்பிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் சிங்கள ஆட்சியாளர்களின் கரங்களில் அகப்பட்டுக் கிடக்கின்றது. சில அரசியல் தலைவர்களின் அந்தரங்கங்கள் சிறிலங்காப் புலனாய்வளர்களால் வீடியோப் படமெடுக்கப்பட்டு சிங்கள ஆட்சியாளர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட அந்தத் தலைவர்கள் தொலைக்காட்சியின் முன்பு அழலாம். வரையறுக்கப்பட்ட அளவில் அறிக்கைகள் விடலாம். அமைச்சுப் பதவிகளைத் துறப்போம் என்று மிரட்டல் விடலாம். ஆனால் நடைமுறையில் அவர்கள் காலைக்கடனைக் கழிப்பதானால் கூட பாவம் சிங்களத் தலைமையிடம் அனுமதிபெற்றுத்தான் அதனைச் செய்தாகவேண்டும்.

10
இதுதான் இன்றைய நிலை.
ஒரு சில தமிழ் தலைமைகளின் நிலையும் கிட்டத்தட்ட இப்படிப்பட்டதாகத்தான் இருக்கின்றது.
எனவே சில தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளை நம்புவதென்பது நேரடியாகவே மகிந்தவையும், கோத்தபாயவையும் நம்புவதற்குச் சமன்.

அடிப்படையில் தமிழ் முஸ்லிம் மக்கள் யதார்தத்தை நம்புவதுதான், தமக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய பொறியில் இருந்து தம்மையும், தமது இனத்தையும், தமது எதிர்காலச் சந்ததியையும் காப்பாற்ற அவர்கள் முன்னுள்ள ஒரே வழி.
என்னைப் பொறுத்தவரையில் அதுதான் சிறந்த வழி.

TPN NEWS

SHARE