மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில்

400

மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பச்சை விளக்கு சமிக்ஞை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 18வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதில் சட்ட சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்து அவர் மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டவாதிகள் பலரும் வாதிடுகின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி சட்டத்துறையில் அதியுயர் நிலையில் உள்ள ஒருவரை சந்தித்து தாம் மூன்றாம் முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து வினவியுள்ளார்.

இது கடந்த 10ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்து அதியுயர் நிலை சட்டவாதி உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்று மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஆயத்தங்களை மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக வழக்கை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

SHARE