பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணையப் போகிறதாம்.
பொதுவாகவே ரஜினி ஒரு படத்தில் நடித்து, அந்தப் படம் ரிலீஸான பிறகே தனது அடுத்தப் படம் குறித்து அறிவிப்பார். ஆனால், இந்த முறை கோச்சடையான் வெளிவருவதற்கு முன்பே லிங்கா படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ரஜினியின் இந்த திடீர் மாற்றம் கோலிவுட்டில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்ல, லிங்கா படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு அடுத்த படத்திலும் ரஜினி உடனடியாக நடிக்க இருக்கிறாராம். ஷங்கர்தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
இது இருவரும் இணையும் மூன்றாவது படம். கல்பாத்தி அகோரம் இப்படத்தைத் தயாரிக்கிறார். கதாநாயகி, மற்ற கதாபாத்திரங்கள் குறித்து இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லையாம். ஐ படம் வெளிவந்த பின்னரே இது குறித்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.