மூன்றாவது முறையாக ஜோடி சேரும் சூர்யா-நயன்தாரா

602

சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன், சமந்தா என பலர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் நயன்தாரா முடிவாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

சூர்யாவும் நயன்தாராவும் ஏற்கனவே கஜினி, ஆதவன் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். தற்போது இருவரும் மூன்றாவது முறையாக ஜோடி சேர்கிறார்கள். மேலும் படத்தில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார். அதற்கான தேடுதல் வேட்டை நடந்துகொண்டு இருக்கிறது.

நயன்தாரா தற்போது தமிழில் சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்திலும், ஜெயம் ரவி ஜோடியாக ஒரு படத்திலும், உதயநிதி ஜோடியாக ‘நண்பேன்டா’ படத்திலும் நடித்து வருகிறார்.

SHARE