மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை வரவுள்ளார். இந்தத் தகவலை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.